Wednesday, January 30, 2013

தல ரசிகனான கதை (கடைசி பகுதி)'கிரீடம்'  படத்தை ஒரிஜனல் டிவிடில சமீபத்தில் தான் பார்த்தேன் ஆனாலும் போஸ்டரால் பாதிக்கப்பட்டு அதே போல் டை கட்டுவதை தொடருகிறேன்.  'பில்லா' ரிலிஸ் ஆன ஒரு வாரம் கடந்து நண்பர் சக்திவேலுடன் விசில் போட்டு பார்த்தாலும் எனக்கு திருப்தியில்லை.

பலருக்கு அஜித்தின் காமெடி புடித்திருந்ததாக சொன்ன ஏகன் - முதல் நாள் ஃபர்ஸ்ட் ஷோ திண்டுக்கல் ராஜேந்திராவில். முதல் முறையாக அஜித் படம் ஒன்றை 'உக்கார முடியல' என்று உணர்ந்த தருணம் அன்று வாய்த்தது. தியேட்டரில் ஒண்ணியும் மூட்டை பூச்சி தொல்லையென்று நினைத்துக்கொள்ள வேண்டாம் மக்களே. படமே மூட்டை பூச்சி !

அடுத்து பொம்மனஹள்ளி கிருஷ்ணா தியேட்டரில் ஒரு வாரம் ஓடி சாதனை படைத்த 'அசல்'.

படத்தை முதல் நாள் என்னுடன் பார்த்தவர்கள் யாரும் இரண்டாம் முறையும் நானே டிக்கெட் போட்டுகிறேன் என்று கூப்பிட்டும் வரவில்லை. அதனால் லோக்கல் பரோட்டா மாஸ்டர் ஒருத்தருக்கு KNOCK OUT பீர் ஊத்தி கூட்டிட்டு போனேன். படம் எனக்கு பரம திருப்தி. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்ட படமாக தோன்றியது.

லேட்டஸ்ட் மங்காத்தா,பில்லா-2வும் அவ்வகை தான். எனக்கு செகண்ட் ஹால்ஃப் மட்டுமே பிடித்திருந்தது மங்காத்தாவில்.

மொத்தத்தில் கட்-அவுட்டில் பீர் ஊத்தலை, திரையில் பால் அபிஷேகம் பண்ணலை ஆனாலும் நான் ஒரு தீவிர அஜித் ரசிகன் தான். என்றைக்கும்!


0 0 0


இன்னபிற கதைகள்:


STARAJITH, AJITHFANS
சைட்களில் தினமும் அட்டணன்ஸ் போடுவேன்.

'அஜீத் ரசிகன்' என்ற ரசிகர் மன்ற மாத இதழை VRT புக் ஸ்டோரில் ஒவ்வொரு முறை வாங்கும் போதும் கடை ஓனர் என்னை புருவம் உயர்த்தி பார்ப்பார்.

நான் சிவப்பு கம்பளம் விரித்து ரோஸ் வாட்டர் தெளித்து வரவேற்கும் விஷயங்களில் ஒன்று 'அல்டிமேட் ஸ்டார்' பட்டத்தை துறந்தது மற்றொன்று ரசிகர் மன்றங்களை கலைத்தது.

'நீ வருவாய் என' தான் எனக்கு ஆல் டைம் ஃபேவரைட். ஒருவேளை அந்த கதாபாத்திரம் லைட்டா எனக்குள் இருப்பதால் கூட பிடித்திருக்கலாம்.

பொதுவாக என்னை யாராவது முதுகில் குத்தும்போதோ, நான் ஏமாற்றபடும்போதோ அல்லது எனக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் போதோ சில பாடல்களை கண்டினியூஸா பாராங்கல் பாரம் பருத்தி பஞ்சாகும் வரை கேட்பேன். அதில் கட்டாயம் 'சத்தமில்லாத தனிமை கேட்டேன்' , 'இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கு என்ன?' ஆகிய தல பாடல்களும் உண்டு.

தைரியம் கலந்த வெளிப்படையான பேச்சை பேட்டிகளில் கேட்டும் படித்தும் இன்ஸ்பயர் ஆனவன் தான் வெளித் தோற்றத்தால் இல்லை என்பதை கூறிக்கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.

0 0 0

No comments: