Tuesday, July 19, 2011

இந்தியா வல்லரசாக முயற்சி செய்பவர்களில் சிலர்


SUN MUSIC, SS MUSIC, JAYA PLUS, இசையருவி போன்ற டிவிகளுக்கு SMS அனுப்புபவர்கள். மேலும் அது டிவியின் கீழ் பகுதியில் ½ விநாடி வருவதைப் பார்த்து பூரிப்பு அடைபவர்கள்.

ORKUT, FACE BOOK  இத்யாதி இத்யாதி.. போன்ற பப்ளிக் ஃபோரம்களில் ஜாதியின் பெயரில் இருக்கும் கம்யூனிட்டியில் மெம்பராகவும், தன் பெயருக்கு பின்னால் ஜாதியின் பெயரையும் போட்டு கொள்பவர்கள்.

அஜித் பெரிய ஆளா - விஜய் பெரிய ஆளா என்று சண்டை போடுபவர்கள்.

மணிக்கணக்கா வெய்ட் செய்து பெப்சி உமா / நினைத்தாலே இனிக்கும் சூர்யா போன்ற ஆட்களுக்கு ஃபோன் செய்பவர்கள்.

5 அல்லது 10 பேருக்கு மெயிலை FORWARD  செய் இல்லைனா காத்து கருப்பு அடிச்சிடும் , செஞ்சா உனக்கு இரண்டு கோடி பரிசுனு சொன்னதும் அதை கடைபிடித்து அனுப்புபவர்கள்.

EXPIRY ஆன ‘பொங்கல் வாழ்த்து’ டைப் கவிதைகளை இன்றைக்கும் எழுதுபவர்கள்.

தொலைக்காட்சியில் போடும் CRICKET HIGHLIGHTSல் ஒரு பிளேயர் சிக்ஸ் அடிச்சா அதற்கும் கை தட்டி அவரை ஊக்கபடுத்துபவர்கள்.

‘1000 பெரியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள் போல’ அப்படினு விவேக் சொன்னது உண்மையிலே ஜோக்குனு நினைச்சு பெரியாரித்தின் மூலம் மக்களை திருத்த நினைப்பவர்கள்.

நோட்டின் அட்டை படத்திலோ அல்லது பர்ஸிலோ ஏதேனும் நடிகையின் வண்ணப்படத்தை வைத்து இருந்தால்,அந்த நடிகைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமலே
அவரை துணைவி(மனைவி அல்ல) என்று நினைக்கும் மாங்காய் விற்பவர்கள்.

லோ-பட்ஜெட் படம் என்றாலே மேட்டர் படம் தான் என்ற நிலைமைக்கு கொண்டு வந்த டைரக்டர்கள்/நடிகர்கள்/தயாரிப்பாளர்கள்(பெரும்பாலும் மூவரும் ஒருவராத்தான் இருப்பார்கள்).


0 0 0

Tuesday, July 12, 2011

வா.மு – வா.பி

என் இனிய தமிழ் மக்களுக்கு...இங்கு சோமசுந்தரம் என்வரின் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கேன். இவரின் வாழ்க்கையும் மென்பொருள் மாதிரிதான் வெர்ஷன் மாறியதே தவிற பிறவி குணம் அப்படியே தான் உள்ளது. 

இவர் வாழ்க்கையின் முக்கியமான ரெண்டு வெர்ஷன்கள் இதோ..

கழுதைக்கு வாக்கப்பட்ட பின்:

1) QUA குடித்து பழகிய சோமசுந்தரத்திற்கு மற்ற தண்ணீர் இறங்கவில்லை. எவ்வளவு தாகம் எடுத்தாலும் அவனுடைய கொள்கையை மாற்றமாட்டேன் என்று சொல்லுவது வழக்கம்.
அது போலவே எந்த ஹோட்டல் போனாலும் அங்கு வைக்கும் சாதா தண்ணீரை குடிக்க மாட்டான்,விக்கல் எடுத்தாலும்!

2) சரக்கடிக்கலாம் என்று A/C பார்க்கு கூட்டிட்டு போய் 100 பைபர்ஸ் மட்டும் அடிச்சான். சைடு டிஷ்ஷா சிலபல டிக்காக்கள்!

3) சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து 2 அல்லது 3-tier AC யிலோ தான் ஊருக்கு போறான். ஆபிஸ் காசு என்றால் ஃப்ளைட்ல  கூட பறப்பேன்னு சொல்லுறான்.

4) தினமும் மதியம் சாப்பிடுது வெஜ் சாலட் – சிக்கன் பர்கர்.ஓசியில் கிடைத்தாலும் குடிப்பது DIET COKE மட்டுமே.

5) வில்ஸ் INSIGNIA தவிற வே எந்த ப்ராண்டும் அடிக்கிறது இல்லைனு படா கோல்ட் ஃப்ளாக் வாங்கி வந்த நண்பனிடம் கூறினானாம்!

6) கொள்கை கொள்கைனு சொல்றவன், டெஹ்ராடூனில் அவன் பியூனா இருந்த போது கஞ்சா அடிச்சிருக்கான்.
ஏன்டானு கேட்டா? ’குமரிமுத்து,மதன் பாப் மாதிரி சிரிப்போம்னு ஒரு மாயை இருந்துச்சு அதான் உண்மையானு அடிச்சு பார்த்தேன்.இதுல என்ன தப்பு?’ என்று திரும்பி கேக்குறான்.

7) நகத்தை அழகா வச்சுக்க MANICURE பண்ணிகிறான். MAC காஸ்மடிக்ஸ் தான் உபயோகபடுத்துவது, தவறாமல் மாதம் இருமுறை கோல்ட் ஃபேசியல் செய்துக்கிறான்.

8) சூடோகு (Sudoku) போடுறான். எப்படினு கேட்டா சம்பந்தமில்லாம ZINCOVIT குடிக்கிறேன்னு சொல்லுறான்.

9)  டிஸ்கோத்தே போறான்...ராப் சாங் கேக்குறான்...பப் தான் இவனுக்கு டீக்கடை.


கழுதைக்கு வாக்கப்படும் முன்:

9) ‘ஆடலும் பாடலும்’ எந்த ஊரில் போடுவாங்கனு அலைவான். அங்கு அவனுடைய கூட்டாளிகள் சகிதம்ரெக்ட் டைம்க்கு ஆஜர் ஆனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.
ஆனாலும் சரக்கடிக்க மாட்டான். ஏனா எவனாது தண்ணி போட்டுட்டு எப்படி கண்ணுமுண்ணு தெரியாமா ஆடுது பாரு’ னு சொல்லிடக்கூடாதுனு கொள்கை!

8) கையில் நல்லா சொடக்கு போடத்தெரியுமே தவிற சூடோகு எல்லாம் தெரியாது. மேலும் சூடோகு சால்வர்களை கண்டால் எரிச்சல் அடைவான். பேப்பர் படிக்கும் போது முன்னாடியே யாராவது அதற்கு விடை எழுதியிருந்தா அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவான்.

7) நகத்தில் வெள்ளை பூ இருந்தால் புது சட்டை கிடைக்கும் என்று நம்பும் இவனுடைய அதிகபட்ச அழகு சாதன பொருள் கோகுல் சாண்டல் பவுடர் மட்டுமே!

6) அவன் ஒட்டு பீடி அடிக்கிறதுக்கு முன்னாடியே கஞ்சா பற்றி அவனுக்கு தெரியும் என்றும், அவுங்க ஊர் தள்ளு வண்டி இழுக்கும் தனுஷ்கொடினு ஒருத்தன் கஞ்சா இழுத்துட்டு சும்மா இங்கிலீசுல பட்டய கெளப்புவாருனு அடிக்கடி சொல்லுவான்.

5) அவனிடம் இருக்கும் காசுக்கு தகுந்த மாதிரி பிராண்ட் மாறும்   ரொம்ப வசதியா இருந்தா தான் ஃபில்டரே!

4) ஊரில் இருக்கும் போது லவ்வோ தான் குடிப்பான். யாராது வீட்டுக்கு வரும்போது கலர் குடிக்கிறீங்களானு கேட்டுட்டு சரினா அவனுக்கும் அவுங்க அம்மாகிட்ட கெஞ்சி ஒன்னு சேர்த்து வாங்கி வந்து கொள்வான்.

3) கல்லூரியில் படிக்கும் போது UNRESERVEDல தான் ஊருக்கு. லோக்கல்ல எங்க போனாலும் வித்தவுட்!

2) ஆபிசர் சாய்ஸ், ஓல்ட் கார்டினல் போன்ற மட்டி சரக்குகளை மட்டும் தான் அடிப்பான். ட்ரீட்டில் மட்டும் VSOP அதுவும் நண்பர்கள் கெஞ்சினால் தான். தொட்டுக்க ஊறுகாய் மட்டும்!

1) இதே சோமசுந்தரம் 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பங்காளி சண்டையில் ஜெயில் சென்றுள்ளான்.அங்கு தண்ணீர் தாகத்தில் கக்கூஸ் பொந்தில் இருக்கும் நீரை கையில் மோந்து குடித்ததை அவன் நண்பன் ஒருவனிடம் மட்டும் கூறி வெளியில் சொல்லிடாதே என்றும் சொன்னதாக அந்த நண்பன் சொன்னான்.

0 0 0

குறிப்பு : கழுதைக்கு வாக்கப்படுவது என்பது மென்பொருள் வேலையில் சேர்வது தான்,தயவு செய்து  குழப்பிக் கொள்ள வேண்டாம்
Friday, July 8, 2011

செம்மொழியாம் தமிழ்மொழியின் டபுள் மீனிங் சினிமா பாடல்கள் – சிறு பார்வை


முன்பெல்லாம் ஊர்த் திருவிழா நாடகங்களில் (பெரும்பாலும் வள்ளி திருமண) பிள்ளையார் சுழியாக வரும் பபூன் எதாவது இரட்டை அர்த்த மொக்கை ஜோக்குகளை அவிழ்த்து விடுவார், அதை கேட்டு சீ செண்டர் ரசிகர்களும் வயிறு வலிக்க சிரிப்பார்கள்.ஆனால் இன்றைக்கோ பபூன்கள் மிக நேரடியாக சொல்லிவிடுகிறார்கள்(!)

ஏன்? என்று லைட்டா யோசித்தால் அதற்கு சினிமா பாடல்கள் தான் காரணம் என்றும் இரட்டை அர்த்தங்களின் இடத்தை இவை பிடித்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டதும் தெரியும்.

சங்க காலத்தில் இருக்கும் சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி அணியை பற்றியெல்லாம் சொல்லபோவதில்லை.நேரடியாக 20ம் நூற்றாண்டை பார்ப்போம்.

முதலில் ஒரு கேள்வி.
‘நீலக் கடல் அலைகள் உனது நெஞ்சின் அலைகளடி’ என்று சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா பாடலில் பாரதியார் கூறுயது உண்மையிலே இரட்டை அர்த்தம் தானா??

சரி கட்டுரைக்கு வருவோம்.

1960களில் 'பேசுவது கிளியா' என்று சொன்னாலே அது சரோஜா தேவி தான் என்று முணுமுணுத்த, 'சேரணுக்கு உறவானா' அது எம்.ஜி.யார் இல்லை என்று சண்டையிட்டு கொண்ட, 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி....' காமராஜருக்கு கண்ணதாசன் எப்படி நூல் விடுறார் பாரு என்றெல்லாம் கூறிய மக்களுக்கும் காலத்திற்கும் சுதந்திரம் கொடுத்தாச்சு.

இன்று நறுக்குனு கடிக்கிலாம்னு  இருக்கு(ஃபான்டா ஆப்பிள்), கோனாலா இருந்தாலும் என்னோடது (குர்குரே) என்று விளம்பரம் வரை டபுள் மீனிங் சால்ஸா டான்ஸ் ஆடும் யுகம்.

இந்த யுகத்தை பாடலாசிரியர்கள் வாரியாக பார்த்தால் கொஞ்சம் ஈஸி.
வாலி, வைரமுத்துவில் இருந்து ஆரம்பிப்போம்.இருவருமே குறும்பர்கள்.

வைரமுத்துவின் பாடல்களில் காமம் கலந்த காதல் வரிகள் அதிகம்.
'கட்டில்கள் ஆடாமல்…. தொட்டில்கள் ஆடாது' என்று இலை மறை காயாக சொல்வதிலும் 'மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா..மார்கெட்டு போகாத குண்டு மாங்கா…' என்று காய் மறை இலையா சொல்வதிலும் அவருக்கு அவரே நிகர்.

சாமுராய் படத்தில் வரும் 'ஒரு நதி', ரிதம் படத்தின் ‘தீம்தனனா’,
உயிரேவின் ‘நெஞ்சினிலே’,ஜெண்டில்மேன் படத்தின் ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ போன்ற பாடல்களை கேட்டாலே உங்க மைண்ட் ஒத்துக்கொள்ளும்.

கமல்ஹாசனிற்கு ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ காலத்தில் இருந்தே இக்கட்டுரைக்கு தொடர்பு இருக்கு.
ஆனாலும் சுய விளம்பரத்தை விரும்பாதவரா அவர் என்ற கேள்வி எழும்பியது தசாவதாரத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்..’ பாடலில் இடம் பெற்ற இந்த வரிகளால்.

‘ராஜ லஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்... ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்’
(கமல் அவர்களின் தாயாரின் பெயர் ராஜலஷ்மி. தந்தை பெயர் ஸ்ரீனிவாசன்)

இப்பாடலை எழுதிய வாலி கூட காரணமாக இருக்கலாம்.அவர் விரசங்களை விட மற்றவர்களை புகழ்வதில் இரட்டை மாங்கா அடிப்பார்.

’ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான்’ 

மேலே சொன்ன பாடலில் வரும் வரிகள் தான் இவையும், வாலி அவர்களின் இயற்பெயர் “ரங்கராஜன்” கெடச்ச கேப்புல சேம் சைட் கோல் போட்டுள்ளாரா என்றும் ஐயம்.

வாலியின் இப்பாடல் வரிகளைப் பார்த்தாலே போதும்.விளக்க தேவையில்லை.

‘கதவச் சாத்து கதவச் சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமையா ஆமா
கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய
நீ கட்ட வேணும்’

அடுத்து ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே...’
தளபதி படத்தில் வரும் இந்த பாடல் சூப்பர் ஸ்டாரை குறிப்பதாக இருந்தாலும், இளைய ராஜா அவர்களின் தாயாரின் பெயர் சின்னத்தாய் என்பதால் அவரைத்தான் இந்தப் பாடலில் வாலி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்  என்றும் கூறுபவர்கள் உள்ளனர்.

‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா,ராஜா கைய வச்சா அது ராங்கா போகாதே’ (மாஸ்ட்ரோ பட்டம் வாங்கின போது போட்ட பாடல்) போன்றவை இளையராஜா துதி பாடுபவை.

அனைத்து பாடலாசிரியர்களுக்கும் போட்டி வச்சா முதல் பரிசு பேரரசுக்கு தான்.படத்திற்கு இரு பாடலாவது செக்ஸ் மசாலா சேர்த்து அறைத்துவிடுவார். ஞானபீட விருது தரும் அளவிற்கு அவர் எழுதிய வரி இது.

’வாடா வாடா வாட்டர் பாக்கெட், காத்திருக்கு காலி பக்கெட்டு.’
திருப்பாச்சி - அப்பன் பண்ணத் தப்புல, சிவகாசி- என்னாத்த சொல்லுவேனுங்க, ஆத்தாடி..ஆத்தாடி (திருப்பதி) போன்ற பாடல்கள் சில உதாரணம். 

(அடுத்து)
தூள் படத்துல இத்துனுண்டா முத்ததிலே இஷ்டம் இருக்கா பாடலில் ’யாழ்ப்பாணம் யானை தந்தம் என்மெல முட்டியது..நாகப்பட்டினம் கப்பல் இப்ப தரைய லேசா தட்டியது ’ னு வரும் வரிகளை எழுதியவரான பா.விஜயும் விவேகாவும்(என் பேரு மீனக்குமாரி….என் ஊரு கன்னியாகுமாரி புகழ்) எழுத்தில் S.J.சூர்யாக்கள்!

துளி இரட்டை அர்த்தம் கூட இல்லாமல் எழுதும் ஒரே கவிஞர் தாமரை மட்டும் தான். 

அறிவுமதி, தமிழ்ப்பாலில் கருத்தாலும் சரி சொல்லாலும் சரி நஞ்சுகலக்க மனம் ஒப்பமாட்டேன் என்று விலகியிருக்கிறார். இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல மூன்று,நான்கு அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும் என்றும் கூறுகிறார்.

முமைத் கான் தோன்றும் செம்மொழி பாடல்களில் காட்டுவதும் காட்டாததும் A சமாச்சாரம் தான் (உதாரணம்:என் சொந்த ஊரூ ஊட்டி…என்னை சொட்டர் போட்டுக்கோ...)

மொத்தத்தில் இவ்வகை பாடல்களை பெரும்பாலும் ரசிக்க ரசிகர்கள் உண்டுதானே??

சிறும்பாலும் இதெல்லாம் மனசு அல்லது மண்ணாங்கட்டிய பொருத்து என்று கூறுவார்கள். அவர்களை நம்பிவிடாதீர்கள்.எல்லாம் கபடநாடகம்.101% உள்ளூர ரசிக்கும் வகையறாக்கள் ஆவார்கள்!

(2010-07-23)


குறிப்பு : சில பாடல்கள் மற்றும்  சில கருத்துகள்  உதவி   'கார்த்திக் பிரபு'  &Sunday, July 3, 2011

சிறுபிள்ளைத்தனங்கள்

You can be childlike without being childish - Christopher Meloni

அனைவருக்குள்ளும் கட்டாயம் சிறுபிள்ளைத்தனம் இருக்கும். (குழந்தை போல குரலை மாற்றி சில பெண்கள் பேசுவார்களே அது அல்ல)
அப்படிபட்ட சிறுபிள்ளைத்தனங்களில் இதை எந்த அழ.அழகேசன்  கிளப்பிவிட்டிருப்பா என்று என்னை யோசிக்க வைத்த டாப் 5.
1) தெருக் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் கைத்தவறி பேட்டை விசிறிவிட்டால் அதை எடுத்து வாயில் கடித்து அவுட் என்பது..
2) சோறு வடித்தக்கஞ்சியில் பென்சில் சீவிய குப்பையை போட்டு ஆற/குளிர வைத்தால் அழிரப்பர் ரெடி என்று கூறிவது..
3) சுடுகாட்டையோ (அ) கல்லறையோ பார்த்து ஆள்காட்டி விரல் நீட்டி 'அங்கே எங்க ஆயா இருக்கு' போல எதையோ தெரியாமல் சொல்லிவிட்டால் அவ்விரலை லைட்டா கடித்து தமக்கு  காத்து கருப்பு அடிக்காமல் பார்த்து கொள்வது..
4) யானையின் சுடச்சுட சாணியை மானாவாரியாக குதித்து மிதித்தால் வெடிப்பு வராது என்று சொல்வது..
5) நாய்டு ஹாலில் அனைத்து வகையான ஆடைகளும் இருந்தாலும் குளிர் பிரதேச டூயட்களில் நடிகைகள் அணியும் ஆடைகள் மட்டும் தான் இருக்கு என்ற மாயையை ஏற்படுத்தியது..

அடுத்து கார்ப்பிரேட்டில் எரிச்சல் ஏற்படுத்தும் டாப் 5

1) ஆன்சைட்க்கு யாரிடமும் சொல்லாமல் முக்காடு போட்டு சென்றுவிட்டு ’என்னப்பா இப்படி பண்ணிட்டே’ என்று கேட்டால்  'எனக்கே கடைசி விநாடியில் தான் சொன்னாங்க உடனே டவுசர தேடி மாட்டிட்டு ஏர்போர்ட் கிளம்பிட்டேன்' என்று பம்மாத்துவது.. 
2) பெண்கள் சர்ட்டில் முதல் பட்டனை போடலேனா அதை வாயில் எச்சியொழுக ரசித்துவிட்டு ஆண்கள் சர்ட்டில் முதல் பட்டன் திறந்திருந்தால் அதை அராஜகம்/ரவுடித்தனம் என்று உளறுவது..
3) ஃபுட் கோர்ட்டில் வைக்கும் வெள்ளரிக்காயை நைட் சரக்கு அடிக்க சைட் டிஷ்ஷாக சுட்டு போவது..
4) எதாவது ஆங்கில சஞ்சிகையில் ஜட்டி விளம்பரத்தை பார்த்துட்டு ஜிம்மிற்கு போய் டம்பிள்ஸை துடைப்பது. (இதுவும் ’என் இனிய பொன் நிலாவே’ பாட்டை கேட்டுட்டு கிட்டார் கிளாஸ் சேருவதும் ஒரே கேட்டகரி தான்)
5) ஓல்ட் மாங்க் அடிச்சுட்டு ஜேக் டானியல்ஸ் அடிச்ச அப்பாடக்கர் கணக்கா பேசுவது..