Wednesday, November 30, 2011

சொதப்பிட்டேன் மச்சி


கடந்த நவம்பர் 20ம் தேதி எனது கவிதை நூல் ரிலிஸ். தினத்தந்தி, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளில் செய்தியும் வந்தது. தினந்தந்தி செய்தி கீழே…




சொதப்பிட்டேன் மச்சி - முழுக்க முழுக்க காதல் கவிதைகளை கொண்ட நூல்.

கவிதைகளை ஏன்? எப்படி? எழுதினேன் என்று சொல்லும் முன் ’காதல்’னா என்ன என்று விளக்குவதை கடமையாக கருதுகிறேன்.

’ஆமிபா’ என்ற ஒரு செல் உயிரனத்திற்கு ஒரு நிலையான வடிவம் கிடையாது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அதுபோல தான் காதலிற்கும் நிலையான வரையறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும்.

என்னுடைய வரையறையை பார்ப்போம்.

காதல் கண்ணிலிருந்து தொடங்கி மனசில் இருகும். பிறகு எதை பார்த்து காதல் வந்ததோ அது மறைஞ்சே போனாலும் காதல் தொடரும்.

இப்ப எது காதல் இல்லை என்று எடுத்துக்காட்டினால் உங்களுக்கு மேலும் பளிங்கு போல் புரியும்.

ஒரு அக்கா நோட்டு புக் ஒன்றை தவற விடுவார் அதை ஒரு அண்ணன் எடுத்து கொடுப்பார். உடனே காதல் வரும்.

ஒரு அக்கா புல் தடுக்கி விழப்போவார் அப்போது ஒரு அண்ணன் இடுப்பை பிடித்து தாங்குவார். காதல் வந்திடும்.

கைலி அணிந்த ஒரு அண்ணன் கடையில் சூடா போண்டா போட்டவுடன் வாங்கி வந்து பக்கத்து வீட்டு அக்காவிற்கு கொடுப்பார். உடனே பின்லாண்ட்டில் டூயட்.

பெரும்பாலான சினிமா காதல்கள் எல்லாம் ஊரை ஏமாற்றும் தனங்கள்.
இதையெல்லாம் தயவுசெய்து நம்பிவிடாதீர்கள் மக்களே!




கவிதைகளுக்கு வர்ரேன். ஏன் கவிதையை எழுதினேன்?

இதற்கு ஒரு அழகான அனாலஜி தருகிறேன். ராமர் ஏன் வில்லை உடைத்தார்?   

சீதையை பிடித்திருந்த காரணத்தால் மட்டுமே…பிடிக்கலைனா கிளம்பு காத்து வரட்டும் னுருப்பார்.

புரிஞ்சதா?

மேலும் ஒன்றை மட்டும் இங்கே சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன்.

நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்வார்கள். நான் விதிவிலக்காக நிலாவை பெண்ணோடு கம்பேர் செய்து கவிதை எழுதவில்லை.

மேலும் 5 வருடங்கள் இன்ஸ்டால்மெண்டில் எழுதின கவிதைகளை தான் தொகுத்து நூலாக வெளிக்கொண்டுவந்துள்ளேன்.

கவிதை நூலை FLIPKARTல் வாங்கி படியுங்கள்.


படித்துவிட்டு?

திருமணமானவர்கள் அவங்கவங்க மனைவியை கணவனை காதலியுங்கள்.
மற்றவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளுங்கள் ஆனால் ஒரு கண்டிசன் பெற்றோர்கள் சம்மதத்துடன்.