Wednesday, November 30, 2011

சொதப்பிட்டேன் மச்சி


கடந்த நவம்பர் 20ம் தேதி எனது கவிதை நூல் ரிலிஸ். தினத்தந்தி, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளில் செய்தியும் வந்தது. தினந்தந்தி செய்தி கீழே…




சொதப்பிட்டேன் மச்சி - முழுக்க முழுக்க காதல் கவிதைகளை கொண்ட நூல்.

கவிதைகளை ஏன்? எப்படி? எழுதினேன் என்று சொல்லும் முன் ’காதல்’னா என்ன என்று விளக்குவதை கடமையாக கருதுகிறேன்.

’ஆமிபா’ என்ற ஒரு செல் உயிரனத்திற்கு ஒரு நிலையான வடிவம் கிடையாது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அதுபோல தான் காதலிற்கும் நிலையான வரையறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும்.

என்னுடைய வரையறையை பார்ப்போம்.

காதல் கண்ணிலிருந்து தொடங்கி மனசில் இருகும். பிறகு எதை பார்த்து காதல் வந்ததோ அது மறைஞ்சே போனாலும் காதல் தொடரும்.

இப்ப எது காதல் இல்லை என்று எடுத்துக்காட்டினால் உங்களுக்கு மேலும் பளிங்கு போல் புரியும்.

ஒரு அக்கா நோட்டு புக் ஒன்றை தவற விடுவார் அதை ஒரு அண்ணன் எடுத்து கொடுப்பார். உடனே காதல் வரும்.

ஒரு அக்கா புல் தடுக்கி விழப்போவார் அப்போது ஒரு அண்ணன் இடுப்பை பிடித்து தாங்குவார். காதல் வந்திடும்.

கைலி அணிந்த ஒரு அண்ணன் கடையில் சூடா போண்டா போட்டவுடன் வாங்கி வந்து பக்கத்து வீட்டு அக்காவிற்கு கொடுப்பார். உடனே பின்லாண்ட்டில் டூயட்.

பெரும்பாலான சினிமா காதல்கள் எல்லாம் ஊரை ஏமாற்றும் தனங்கள்.
இதையெல்லாம் தயவுசெய்து நம்பிவிடாதீர்கள் மக்களே!




கவிதைகளுக்கு வர்ரேன். ஏன் கவிதையை எழுதினேன்?

இதற்கு ஒரு அழகான அனாலஜி தருகிறேன். ராமர் ஏன் வில்லை உடைத்தார்?   

சீதையை பிடித்திருந்த காரணத்தால் மட்டுமே…பிடிக்கலைனா கிளம்பு காத்து வரட்டும் னுருப்பார்.

புரிஞ்சதா?

மேலும் ஒன்றை மட்டும் இங்கே சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன்.

நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்வார்கள். நான் விதிவிலக்காக நிலாவை பெண்ணோடு கம்பேர் செய்து கவிதை எழுதவில்லை.

மேலும் 5 வருடங்கள் இன்ஸ்டால்மெண்டில் எழுதின கவிதைகளை தான் தொகுத்து நூலாக வெளிக்கொண்டுவந்துள்ளேன்.

கவிதை நூலை FLIPKARTல் வாங்கி படியுங்கள்.


படித்துவிட்டு?

திருமணமானவர்கள் அவங்கவங்க மனைவியை கணவனை காதலியுங்கள்.
மற்றவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளுங்கள் ஆனால் ஒரு கண்டிசன் பெற்றோர்கள் சம்மதத்துடன். 



Wednesday, August 24, 2011

வெற்றிநடைபோடுகிறது


வசீகரன், இன்சூரன்ஸ்(லைஃப் மற்றும் லைஃபை புடுங்கும் வெஹிகில் இரண்டுக்கும்) ஏஜண்ட் & சென்னை புறநகர் ஈஸ்ட் தாம்பரத்தில் ஆல்-இன்-ஆல் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் பேச்சுலர் – கம் - எஸ்.டி.ஆர் ரசிகரும்.

புகழேந்தி, அங்கு கணினி ஆப்ரேட்டர்.போட்டோஸாப்பில் பூபந்து விளையாடுவான்.மென்பொருள் கம்பெனியில் 1 வருடம் பெஞ்சு தேச்ச அனுபவமும் உண்டு.

அன்று ஞாயிற்றுக்கிழமை 11 A.M. 

”வசி, இந்த ரிப்போர்ட்ஸ ஃபிரண்ட் & பேக் ரெண்டு சைடும் 4 காப்பி போடு” என்றாவாரே சென்டரினுள் நுழைந்தான் 44 இன்ச் சட்டையிலிருந்து 39 இன்ச் சட்டைக்கு மாறியிருந்த ரவி.

”குட் மார்னிங் ரவிணே” ஆர்வமாக பக்கத்தில் வந்தான் புகழ்.

”எதுக்கு ரவி? இத ஜெராக்ஸ் போடு மாப்ள” என்றான் புகழிடம்.

”காப்பீட்டு திட்டத்தில் ஆஸ்பத்தரில சேரப்போறேன் அதான்.”

ஜெராக்ஸ் போடும் போது ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை மேய்ந்ததில் 132 T செல்ஸ் பெர் மைக்ரோ லிட்டர்(µL) (200 T செல்ஸ் கீழே இருந்தால் எதிர்ப்புச்சக்தி இல்லாம ஆளு காலி அப்படினு ஹெல்த் டுடேவில் படிச்சுருக்கான் புகழ்) என்றிருந்ததை பார்த்து ”கன்ஃபார்மா அப்ப” மெதுவாக சொல்லிக்கொண்டான் புகழ்.

”இந்தாங்கணே ஜெராக்ஸ்…. டைட் ஃபிட்டிங் சட்டைலாம் போட்டு நல்லாதானே இருக்கீங்க…..என்ன வியாதி திடீர்னு?”

தும்மினான் ரவி.

”சைனஸா?” 

”நிமோநியா காய்ச்சல்.”

”மாப்ள…..அந்த ஷில்பா பொண்ணோட ஜாவா கோட்ல நல் பாய்ண்டர் எக்ஸப்ஷன் வந்துச்சு அத பாரு” இடைநுழைந்தான் வசி.

”அது ஃபிக்ஸ் பண்ணியாச்சு மாம்ஸ். அண்ணே ரொம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்னு இருந்தேன்.இன்னைக்கு கேக்கட்டா?” 

”என்ன?”

”ஃபிகர் மடிக்க ஐடியா தாங்கணே…..நீங்கதான் தீராம அனுபவிச்ச விளையாட்டு பிள்ளையாம்ல!” 

”எவன் சொன்னது?” உறுமினான் ரவி.

”மாப்ள கம்முனு இரு. நீ கிளம்பு ரவி இவன் சும்மா உளறுறான்”

”பொறுங்க மாம்ஸ்….ஊரே சொல்லுது. ’நிஜம் நடந்தது என்ன’ல கூட சீக்கரம் வந்துரும் போல.”

”கடுப்ப ஏத்தாத….…..”

(ஏதோ ஒரு FMமில் ''ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் என்ற பாடல் யாருக்கோ டெடிக்கேட் ஆகிக்கொண்டிருக்க)

”சுச்சுவேசன் சாங் மாம்ஸ்.உங்க அனுபவி ராஜாரவிக்கு எத்தனை ராணிகணு தெரியுமா?”

ரவி புகழை கெட்ட வார்த்தையால் திட்ட ஆரம்பித்தான்.

புகழ் I.P.C 298 செக்‌ஷன்ல கேஸா போடுவான்? அவனும் பதிலுக்கு சகட்டுமேணிக்கு திட்டி அடிக்க போக….. அக்கம்பக்கமும் வசியும் சமாதானப்படுத்தி ரவியை கிளப்பியதும் களேபரம் நின்றது.

”ஏன் மாப்ள எல்லாத்தையும் கலாய்க்கிற மாதிரி இவனையும்? பாவம்டா அவன்.”

”நீங்க தான சொன்னிங்க?”

“…….”

”நான் இவன்ட்ட அப்படி என்ன சொன்னேன்னு யோசிக்க வேணாம்.முந்தாநேத்து சாயங்காலத்துக்கு போய் பார்த்தாலே போதும் மாம்ஸ்.”

முந்தா நேற்று 7 P.M.

நாலு ஸ்டெப் நடை, நாலு ஸ்டெப் ஓட்டம், நாலு ஸ்டெப் நடை, நாலு ஸ்டெப் ஓட்டம் என்று கடந்து போன அந்த வெள்ளிக்கிழமை ஸாஃப்ட்வேர் பெண்குட்டிய வெறிச்சு பார்த்தவாரே பேச ஆரம்பித்தான் வசி.

“இந்நேரம் புகழ் இருந்திருந்தா சும்மா 2 ஸ்ட்ரோக் ஆட்டோ மாதிரி குழுங்கிட்டு போறாலேனு ஜொல்லிருப்பான்”

”ஹா..ஹா.. நானும் கேட்கணும்னு நினைச்சேன்.எங்க அவனைக் காணாம்?” என்றான் வசியின் நண்பன் சந்தோஷ்.

“சோலார் வாட்டர் ஹீட்டர் மாட்றதுக்கு S.P.கோயில் வரைக்கும் போயிருக்கான்.”

“ஆமாமா…இப்பயே குளிர ஆரம்பிச்சுருச்சு! சரி வசி லேட்டாச்சு.கிளம்புரேன் வீட்ல வைஃப் திட்டுவா..”

”உன் புருசன் திட்டுவான்றது தெரிஞ்சதுதான கிளம்பு.”

“உனக்கு கல்யாணமாகலைனா நக்கல் தன்னால வரும்பா” யமகாவில் கிக்கிட்டு கிளம்பினான்.

சந்தோஷ் கிளம்பிப் போனபின் தான் வரவேண்டும் என்று காத்திருந்தது போல புகழ் வந்துசேர்ந்தான்.

“மாம்ஸ், ஃபுல் லோடு தண்ணிலாரி ECRல பிரேக் பிடிக்காம போற மாதிரி ஒரு வைட் டீ-சர்ட் போச்சு பாத்திங்க? இல்ல மிஸ் பண்ணிடிங்களா?.” 

”ம்” 

”அவ நடை மின்னல்,இடை பளிங்குகல்,அதில் என் மனசு சறுக்கல்……. படிச்சு படிச்சு சொன்னார் எங்கப்பா டி.ஆர் ஹீரோவா நடிச்ச படத்தை பாக்காதடானு கேட்டனா நான்? அதான் இந்த எஃபெக்ட் கண்டுக்காதிங்க”

‘ம்’

”சரி. ஒரு நல்ல மேட்டர். ஒரு கெட்ட மேட்டர்.சொல்லட்டுமா?”

’ம்’

இந்நேரத்துல என்ன மூட் அவுட் இவருக்கு ”மாம்ஸ்,ஷங்கரோட அடுத்த ’அழகிய குயிலே’ படத்துல எஸ்.டி.ஆர் தானாம் ஹீரோ!”

”உண்மையா…எதுல படிச்ச?” உற்சாகமானான் வசி.

”இப்ப வாயத்தொறந்துட்டிங்களா? சும்மா கப்ஸாவிட்டேன்.எப்பயும் போல கெட்ட மேட்டரை கேக்காமலியே சொல்லட்டா?”

”சரி…சொல்லு”

”உங்க உயிர் நண்பன் ரவி இப்ப புள்ளிரவியாம்ல…?”

”மிக்ஸிங் ஊத்தாம ராவா சொல்லு மாப்ள.”

“ம்கும்…..ரவிக்கு HIV+ஸாம்!”

”அடப்பாவி அவனுக்கா?”

”சரியான ஜேம்ஸ்பாண்ட் மாம்ஸ் அவன்.”

”எதுல?”

”வேறெதுல…லேடிஸ் மேட்டர்ல தான்.”

”ஹ்ம்ம்….புள்ள பிடிக்கிற ’ஆம்வே’ல சேந்து பொம்பளை பிடிக்கும்போதே நினைச்சேன் எதாவது வெனைவரும்னு.”

”அப்பறம் அந்த I.P.C 498aவ மிஸ்யூஸ் பண்ணி அவன் பொண்டாட்டி டைவர்ஸ் வாங்கினதும் இதனாலதானு கிசுகிசு ஊருக்குள்ள...உண்மையா கூட இருக்கலாம் மாம்ஸ்”

”சங்கட்டமா இருக்கு மாப்ள. ஏற்கனவே என் ஃபிரண்ட் வீராச்சாமி சிஃபிலியஸால போன மாசம் செத்துட்டான்,இப்ப இவனும்..”

”டிக்கெட் வாங்கப்போறானு சொல்லவறிங்களா?.. வீராச்சாமி அந்த கூடுவாஞ்சேரி ஆளு தான?”

”ஆமாம்.அதுகூட க்யூர் பண்ணமுடிஞ்ச வியாதி தான் ஆனா எல்லாரும் அவனை புறக்கனிச்சதால தான் ஏங்கி செத்தான். ஆனால் ரவி மேட்டர்ல அத தவிற்கணும்.சமமா டிரிட் பண்ணனும்.பசங்க கிட்டயும் சொல்லிரு. அவன்கிட்ட நீயும் மத்தவங்கள்ட ஜாலியா இருக்கிற மாதிரி இரு.”    

”அதான் இப்பயெல்லாம் மணக்க மணக்க மல்லிகப்பூ வாசத்தில கிடைக்குதே அதை மாட்டாம நோய மாட்டிகிட்டா நாம ஏன் பரிதாபப் படணும் மாம்ஸ்?”

“ஆயிரம் தப்பு பண்ணாலும் நம்ம பையன்டா அவன்!”

”சரிவிடுங்க தென்கச்சி பாஷைல சொல்லணும்னா இத்தனை நாள் இனிமையா இருந்த ரவிக்கு இனி வரும் நாட்களும் இனிமையா இருக்கட்டும்.”

”குட்”

(அமைதி)

”சரி சரி…அந்த நல்ல மேட்டர் என்ன மாப்ள?”

”அதுவா…’பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை முதல் ரேங்க் வாங்க வைப்பது எப்படி?’னு ஒரு சிறுகதை எழுதிபோட்டேன்.செலக்ட் பண்ணியிருக்காங்க ஆ.விகடன்ல.”

”என்ன மணிமேகலை பிரசுரம் டைப் கதையா?”

”இல்ல மாம்ஸ். டைட்டில் மட்டும் தான் அப்படி. கதை சும்மா ’வா.மு.கோமு’ ஸ்டைல் அஜால் குஜால் தான்!”

”அப்ப ஸ்யாமின் க்ளாமர் ஸ்டில்லோடு எதிர்பார்க்கலாம்” என்று சட்டரை மூடினான் வசி.



Wednesday, August 17, 2011

ஊடாடும் வாழ்வு - படிச்சுப்பார்த்தேன் ஏறியது என்ன?

நூலின் ஆசிரியர் கவியோவியத்தமிழன் திண்டுக்கல்காரர் என்ற ஒரே காரணத்தினால் வாங்கி படித்த சிறுகதை தொகுப்பு!

மனுஷன் சும்மா கருத்து சொல்கிறேன் என்று எதையும் திணிக்கவில்லை. அந்துமணி ஸ்டைலில் சொல்லணும்னா இவர் பார்த்தது-படித்தது-கேட்டதை தான் கொஞ்சம் கற்பனை மசாலாவும் கொஞ்சம் செண்டிமெண்டும் (பூனை கதையில் மட்டும் அதிகமாக) சேர்த்து அரைத்துள்ளார்.என்ன ஆரண்ய காண்டம் திரைப்படம் போல கெட்டவார்த்தை பேசும் கதாபாத்திரங்கள் கதைகளில் அதிகம்!



கதைகளின் களம் என்று பார்த்தால் திண்டுக்கல்லை மையமாக வைத்து 50KM ரேடியஸில் ஒரு வட்டம் போட்டால் எத்தனை ஊர் வருமோ, அவ்ளோதான் இவர் குதிரை ஓட்டியுள்ள குண்டுச்சட்டியின் நிலப்பரப்பு.

கதைகளில் வரும் ஹீரோவை நம்ம கற்பனையில கொண்டுவர்றது ரொம்ப சிரமம்! ஏனால் அவன் கவிதை எழுதுறான், ஓவியம் வரையிறான், தண்ணி அடிக்கிறான், அஜால் குஜால் பண்றான், பொசுக்கு பொசுக்குனு அழுறான்(ஊடாடும் வாழ்வு கதையில்), பகுத்தறிவு பேசி சாமி சிலையில் காரி துப்புறான் (செங்காளியில்), ஆனா கருத்து மட்டும் சொல்லமாட்டிங்கிறான். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கொஞ்ச நாள் முன் வெளியான ‘தா’ படத்தின் கதாநாயகன் முகத்தோடு கொஞ்சம் ஒட்டி போகும்!

காதில் பூ வைக்கும் கதைனா ‘ஒரு ரசிகை’ மட்டும் தான்.
பெரும்பாலான கதைகளில் ஆணாதிக்க சமூகத்தை கண்முன் காட்சியாக விவரிக்கிறார். அப்பறம் காதலை கவிதையா எழுதியிருக்கார் கதைகளில் (மின்மினிகளின் ராஜ்யம் அதில் உச்சம்) என்ன பண்றது கைலி வேட்டியும் தாடியும் வச்சுக்கின்னு அழுக்காயிருக்கிற ஹீரோக்களுக்கு தானே காதல் வருது இக்காலத்தில்?!

நூலில் இடம்பெற்ற கதைகளின் காலக்கட்டம் 15 வருடங்கள் இருக்கலாம் என்பது என் அனுமானம். ஏனா சில மொக்கையான கதைகளும் அடங்கியிருக்கு!

அதிலொன்று தான் நண்பன் மனசு-ஹீரோவின் முகமறிந்து 100 ரூவை ஒருவனிடம் கொடுத்து கிளம்பும் நண்பனை பற்றி. இந்த காலத்தில் இப்படிப்பட்ட நண்பர்களை பார்ப்பது அரிது!

அப்பறம் காதலென்பது , பள்ளிக்கு நேரமாச்சு ஆகிய இரண்டும் ஸாலிடர் டிவி சமாச்சாரம்.
இலக்கியத்தால் வரும் ஒரு பெண் நட்பு காதலாக மாறினபின் பிரியுதாம் ஆனாலும் பிரியம் அப்படியே இருக்காம்!

பள்ளிக்கு நேரமாச்சுவின் கதாபாத்திரம் செல்வியின் அம்மா க.காதலனுடன் ஓடி விடுகிறார்,அப்பா – சாதி சண்டையால் செத்துப்போகிறார் இவள்(செல்வி) கலெக்டர் கனவுடன் கொய்யாப்பழம் விற்க பள்ளிக்கூடம் செல்கிறாள்,யப்பப்பா…..

கவியோவியத்தமிழனிடம் கேள்விகளை கேட்க தூண்டும் கதைகளை பார்ப்போம்.

எந்த மிக்ஸிங்கும் கலக்காத பக்கா ’ரா’வான கதைகளில் ஒன்று பிடிமானம்
ஃபுள்ளா ஓல்ட் மங் அடிச்சுட்டு வர குடிகார கணவன் தினமும் தன்னை அடிக்கலாம்,ஆனால் வேற யாராது அவனை அடித்தால் தாங்க முடியாம பத்ரகாளியாக மாறுகிறார்,குடிகாரனின் மனைவி!
கண்ணகி,நளாயினி போன்ற பெண் கதாபாத்திரமா ஆசிரியர்?

அடுத்து காத்திருப்பில் பெய்யும் வெயில்

கண்மணிக்காக மணப்பாறை பேருந்து நிலையத்தில் காத்திருக்கறார் கதைநாயகன். லெட்சுமி என்னும் மாற்றுதிறனாளி கதாபாத்திரத்தில் எதையோ சொல்றீங்க. ஃபினிசிங் என்னதான் சொல்ல வரிங்கனே தெரிலயே க.யோ.தமிழன்?

அல்பாய்ஸ்ல செத்தவனின் பாடியின்(டெட்) பார்வையில் இருந்து விவரிப்புகளால் வித்தியாசமான கதையாகிறது மின்னல் பூக்கும் இரவு ஆனால் வினிதா ஏன் வெள்ளை புடவையும்,கூந்தல் விரிச்சுக்கிட்டு அழையிற சினிமா பேய் போல காட்சி தருகிறார்?

அக்கா, மனைவி என்பவள், கைக்கு எட்டியது மூன்றும் அக்மார்க் டிவி மெஹா சீரியல்!

பின்ன வீட்ல அம்மா தொல்லை தாங்கமுடியாமல் துணி விற்பவன் கூட திருப்பூர்க்கு ஓடிவீடுவது, மனைவியோடு சண்டை போட்டு கொண்டு நைட் 12.30 வரை டீக்கடையில் சும்மா உக்கார்ந்துவிட்டு கிளம்புவது, STD பூத்ல வேலைபார்ப்பவள் மேல் காதலோ காமமோ கொள்ளும் ஒருவனை அண்ணே என்று சொல்லி அவள் கலட்டிவிடுவது எல்லாம் வேறெதுல சேக்குறது மக்களே?

கிளைமாக்ஸ் கதையான புயலான தென்றலில் சந்திரா என்னும் விதவை படும் அன்றாட அவளங்கள் சொல்லப்படுகிறது. அதிரும் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லையென்றால் இக்கதையும் சீரியல் பட்டியலில் சேர்ந்திருக்கும்.

அவசரம், துளசி, கரைதாண்டுதல் இந்த மூன்றும் தான் என் பார்வையில் ஸ்டார் கதைகள்! இக்கதைகளுக்காக மட்டுமே புத்தகத்தை வாங்கலாம்.

அவசரம் - இயற்கை உபாதையை(கக்கூஸ்) தெரியாத ஒரு ஊரில் போக்கப்படும் அவஸ்தையை கதையாக எழுத யாராவது யோசிக்க முடியுமா?? படிக்கும் போது கூட மூக்கை பொத்தி கொண்டு படிக்க வேண்டிய மாதிரி பண்ணிட்டார்!

துளசி - கம்ளர் என்ற காமகொடூர சாதியினருடன் பழகி எழுதியது போல இருக்கு,ஆனாலும் அதிர்ச்சியாக்கவில்லை. முஸ்லி பவர் சாப்பிட்டு கூட சல்லாபிக்கும் ஆட்கள் இருக்கும் ஊரில் தானே நாம் இருக்கோம்!

குழந்தை இல்லாத செவ்னி ’வீரப்பூர் கோயில்’ சென்று குழந்தைக்காக கரைதாண்டுவது இன்ஃபர்மடிவ்!

ஒகே முடிச்சிருலாம்.

புத்தகத்தை முழுவதும் படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேய்ந்தால் சாரு நிவேதிதாவின் தேகம் நாவலை மிஷ்கின் ’சரோஜாதேவி’ என்று உளறியது போல செய்ய வாய்ப்புகள் அதிகம்!

அப்படி யாராது உளறினாலும் அதை எல்லாம் தூக்கி ரீசைக்கிள் பின்ல போட்டுவிட்டு நீங்க கலக்குங்க கவியோவியத்தமிழன்!
o o o

இந்த சிறுகதை தொகுப்பு வெளியீடு : தீக்குச்சி வெளியீட்டகம். திண்டுக்கல்.
வெளியீட்டாளர் : இரா. தமிழ்தாசன். விற்பனை தொடர்புக்கு அலைபேசி : 90031 83822.98420 98002. விலை ரூ 80.00 

Thursday, August 4, 2011

ஆர்குட் என்னும் செத்த பாம்பு

ல்லூரியில் நான் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் தான் ஆர்குட் மெல்ல பிரபலமடைந்து கொண்டிருந்தது.அந்த ஆரம்ப காலத்திலேயே ஒரு தொடர்பின் மூலம் அதில் உறிப்பினரானேன்.

ஆர்குட் ஒரு தனி உலகம், லோக்கலா சொல்லணும்னா போதை.
கொகைன், வீடியோ கேம்,கஞ்சாவை போல ஆட்களை அடிமையாக மாற்றிவிடும். ஆனால் இப்போது இந்தியாவில் இது தடைசெய்யபட்டுவிட்டதா என்று கேட்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. அதன் காரணம் சொல்லத் தேவையில்லை.

நானும் ஆர்குட்டும் :

யாரும் ஸ்கராப் அனுப்ப மாட்டிங்கறாங்கனு வருத்தப்பட்ட காலத்தில் ஆரம்பித்து, வீம்புக்கு சிலருக்கு (பெண்களும் உண்டு) ரிப்லே பண்ணாமல் இருந்த காலத்தில் தொடர்ந்து, இப்ப ஸ்கராப்  அனுப்ப யாருமே இல்லாமல் போன காலம் வரை  என்னுடையது.

நானும் ஆரம்பத்தில் விடலைத்தனத்தால் ஆர்குட்டை சில பல பிரயோசனமில்லாத  விஷயங்களுக்கு  பயன்படுத்தினேன். அப்பறம் ஒரு ஸ்டேஜ்ஜில் தெரிஞ்சது ’பச்சை கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் பச்சையாக தான் தெரியும்’ என்று.
கண்ணாடியை  கலட்டிவிட்டு நல்ல பயனுள்ள காரியத்திற்கு மட்டும் பயன்படுத்த தொடங்கினேன். உதாரணமாக… ’உலக தமிழ் மக்கள் அரங்கம்’ கம்யூனிட்டியை சொல்லலாம். அதில் உறுப்பினராக இருப்பதே பெருமை. அகர முதல் ஊடல் வரை அனைத்து டாபிக்கையும் அலசிவிடுவார்கள்.

அப்பறம் பப்ளிக் கக்கூஸாகவும் பொருட்காட்சியாகவும் எனது ப்ரொஃபைலை உபயோகிக்க விருப்பமில்லாமல் சில ஃப்ரண்ட்ஸ்  ரெக்வஸ்ட்களை எந்த தயவுதாட்சணியமும் பார்க்காமல் ரிஜெக்ட் செய்திருக்கிறேன்.50 சொச்சம் பேரை களை எடுத்திருக்கிறேன்.

 
கம்யூனிட்டி :

ஆர்குட்டின் கம்யூனிட்டிகள் விமர்சியானது.முழுவதும் சொல்லணும் என்றால் ஒரு நாவல் பத்தாது. (யாரும் எழுத சொல்லிராதீங்க!)

எது எதற்கு கம்யூனிட்டி ஆரம்பிக்கனும் என்று வரைமுறை,விவஸ்தை இல்லாமல் நம்ம மக்கள் ’திருப்தி அடையாத ஆன்ட்டி’களில் இருந்து  ’வாட்டர் பாக்கெட்’ வரை ஆரம்பித்துள்ளனர்.

’நா.முத்துகுமார்’,’சாரு நிவேதிதா’ இருவருக்கும் தனியாக நான் கம்யூனிட்டி வச்சுருக்கேன்.


இன்னொரு முகம் :

விபச்சாரப் புரோக்கர்கள், ஜிகிலோ எனப்படும் ஆண் அவுசாரிகள் அதிகமாக இதில் உலவுகிறார்கள். மேலும் விபரங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

அப்பறம்  ’ங்கோத்தா ஙொம்மா’ என்று திட்டுவதற்கு என்றே சிலர் டம்மி ப்ரொஃபைல் வைத்து அவர்களுடைய ரகசிய ஆசைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இது தங்களுடைய  ஊரை விட்டு பக்கத்து மாவட்டத்திற்கு முக்காடு போட்டு சென்று மலையாள அஜால் குஜால் படம் பார்ப்பதற்கு ஒத்தாகும்.

கடைசியா என்ன சொல்ல வரேன் ? :

முகத்தை காட்டாமல்  ப்ரொஃபைல் வச்சிருப்பவர்கள், புகைப்படமாக  சினிமா நடிகை/நடிகர்களின் ஸ்டில்களை கொண்டிருப்பவர்கள், போலிகள்,  வாயில் கொடுத்தவர்கள்,வாங்கினவர்கள் ,என் தோழர்கள்  மற்ற அனைவருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா ?

நான் JULY 23 2011 முதல் பேஸ்புக்கில் சேர்ந்துட்டேன். ZUCKERBERG, நீ சாதிச்சிட்ட ராசா……………..



Tuesday, July 19, 2011

இந்தியா வல்லரசாக முயற்சி செய்பவர்களில் சிலர்


SUN MUSIC, SS MUSIC, JAYA PLUS, இசையருவி போன்ற டிவிகளுக்கு SMS அனுப்புபவர்கள். மேலும் அது டிவியின் கீழ் பகுதியில் ½ விநாடி வருவதைப் பார்த்து பூரிப்பு அடைபவர்கள்.

ORKUT, FACE BOOK  இத்யாதி இத்யாதி.. போன்ற பப்ளிக் ஃபோரம்களில் ஜாதியின் பெயரில் இருக்கும் கம்யூனிட்டியில் மெம்பராகவும், தன் பெயருக்கு பின்னால் ஜாதியின் பெயரையும் போட்டு கொள்பவர்கள்.

அஜித் பெரிய ஆளா - விஜய் பெரிய ஆளா என்று சண்டை போடுபவர்கள்.

மணிக்கணக்கா வெய்ட் செய்து பெப்சி உமா / நினைத்தாலே இனிக்கும் சூர்யா போன்ற ஆட்களுக்கு ஃபோன் செய்பவர்கள்.

5 அல்லது 10 பேருக்கு மெயிலை FORWARD  செய் இல்லைனா காத்து கருப்பு அடிச்சிடும் , செஞ்சா உனக்கு இரண்டு கோடி பரிசுனு சொன்னதும் அதை கடைபிடித்து அனுப்புபவர்கள்.

EXPIRY ஆன ‘பொங்கல் வாழ்த்து’ டைப் கவிதைகளை இன்றைக்கும் எழுதுபவர்கள்.

தொலைக்காட்சியில் போடும் CRICKET HIGHLIGHTSல் ஒரு பிளேயர் சிக்ஸ் அடிச்சா அதற்கும் கை தட்டி அவரை ஊக்கபடுத்துபவர்கள்.

‘1000 பெரியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள் போல’ அப்படினு விவேக் சொன்னது உண்மையிலே ஜோக்குனு நினைச்சு பெரியாரித்தின் மூலம் மக்களை திருத்த நினைப்பவர்கள்.

நோட்டின் அட்டை படத்திலோ அல்லது பர்ஸிலோ ஏதேனும் நடிகையின் வண்ணப்படத்தை வைத்து இருந்தால்,அந்த நடிகைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமலே
அவரை துணைவி(மனைவி அல்ல) என்று நினைக்கும் மாங்காய் விற்பவர்கள்.

லோ-பட்ஜெட் படம் என்றாலே மேட்டர் படம் தான் என்ற நிலைமைக்கு கொண்டு வந்த டைரக்டர்கள்/நடிகர்கள்/தயாரிப்பாளர்கள்(பெரும்பாலும் மூவரும் ஒருவராத்தான் இருப்பார்கள்).


0 0 0

Tuesday, July 12, 2011

வா.மு – வா.பி

என் இனிய தமிழ் மக்களுக்கு...இங்கு சோமசுந்தரம் என்வரின் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கேன். இவரின் வாழ்க்கையும் மென்பொருள் மாதிரிதான் வெர்ஷன் மாறியதே தவிற பிறவி குணம் அப்படியே தான் உள்ளது. 

இவர் வாழ்க்கையின் முக்கியமான ரெண்டு வெர்ஷன்கள் இதோ..

கழுதைக்கு வாக்கப்பட்ட பின்:

1) QUA குடித்து பழகிய சோமசுந்தரத்திற்கு மற்ற தண்ணீர் இறங்கவில்லை. எவ்வளவு தாகம் எடுத்தாலும் அவனுடைய கொள்கையை மாற்றமாட்டேன் என்று சொல்லுவது வழக்கம்.
அது போலவே எந்த ஹோட்டல் போனாலும் அங்கு வைக்கும் சாதா தண்ணீரை குடிக்க மாட்டான்,விக்கல் எடுத்தாலும்!

2) சரக்கடிக்கலாம் என்று A/C பார்க்கு கூட்டிட்டு போய் 100 பைபர்ஸ் மட்டும் அடிச்சான். சைடு டிஷ்ஷா சிலபல டிக்காக்கள்!

3) சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து 2 அல்லது 3-tier AC யிலோ தான் ஊருக்கு போறான். ஆபிஸ் காசு என்றால் ஃப்ளைட்ல  கூட பறப்பேன்னு சொல்லுறான்.

4) தினமும் மதியம் சாப்பிடுது வெஜ் சாலட் – சிக்கன் பர்கர்.ஓசியில் கிடைத்தாலும் குடிப்பது DIET COKE மட்டுமே.

5) வில்ஸ் INSIGNIA தவிற வே எந்த ப்ராண்டும் அடிக்கிறது இல்லைனு படா கோல்ட் ஃப்ளாக் வாங்கி வந்த நண்பனிடம் கூறினானாம்!

6) கொள்கை கொள்கைனு சொல்றவன், டெஹ்ராடூனில் அவன் பியூனா இருந்த போது கஞ்சா அடிச்சிருக்கான்.
ஏன்டானு கேட்டா? ’குமரிமுத்து,மதன் பாப் மாதிரி சிரிப்போம்னு ஒரு மாயை இருந்துச்சு அதான் உண்மையானு அடிச்சு பார்த்தேன்.இதுல என்ன தப்பு?’ என்று திரும்பி கேக்குறான்.

7) நகத்தை அழகா வச்சுக்க MANICURE பண்ணிகிறான். MAC காஸ்மடிக்ஸ் தான் உபயோகபடுத்துவது, தவறாமல் மாதம் இருமுறை கோல்ட் ஃபேசியல் செய்துக்கிறான்.

8) சூடோகு (Sudoku) போடுறான். எப்படினு கேட்டா சம்பந்தமில்லாம ZINCOVIT குடிக்கிறேன்னு சொல்லுறான்.

9)  டிஸ்கோத்தே போறான்...ராப் சாங் கேக்குறான்...பப் தான் இவனுக்கு டீக்கடை.


கழுதைக்கு வாக்கப்படும் முன்:

9) ‘ஆடலும் பாடலும்’ எந்த ஊரில் போடுவாங்கனு அலைவான். அங்கு அவனுடைய கூட்டாளிகள் சகிதம்ரெக்ட் டைம்க்கு ஆஜர் ஆனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.
ஆனாலும் சரக்கடிக்க மாட்டான். ஏனா எவனாது தண்ணி போட்டுட்டு எப்படி கண்ணுமுண்ணு தெரியாமா ஆடுது பாரு’ னு சொல்லிடக்கூடாதுனு கொள்கை!

8) கையில் நல்லா சொடக்கு போடத்தெரியுமே தவிற சூடோகு எல்லாம் தெரியாது. மேலும் சூடோகு சால்வர்களை கண்டால் எரிச்சல் அடைவான். பேப்பர் படிக்கும் போது முன்னாடியே யாராவது அதற்கு விடை எழுதியிருந்தா அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவான்.

7) நகத்தில் வெள்ளை பூ இருந்தால் புது சட்டை கிடைக்கும் என்று நம்பும் இவனுடைய அதிகபட்ச அழகு சாதன பொருள் கோகுல் சாண்டல் பவுடர் மட்டுமே!

6) அவன் ஒட்டு பீடி அடிக்கிறதுக்கு முன்னாடியே கஞ்சா பற்றி அவனுக்கு தெரியும் என்றும், அவுங்க ஊர் தள்ளு வண்டி இழுக்கும் தனுஷ்கொடினு ஒருத்தன் கஞ்சா இழுத்துட்டு சும்மா இங்கிலீசுல பட்டய கெளப்புவாருனு அடிக்கடி சொல்லுவான்.

5) அவனிடம் இருக்கும் காசுக்கு தகுந்த மாதிரி பிராண்ட் மாறும்   ரொம்ப வசதியா இருந்தா தான் ஃபில்டரே!

4) ஊரில் இருக்கும் போது லவ்வோ தான் குடிப்பான். யாராது வீட்டுக்கு வரும்போது கலர் குடிக்கிறீங்களானு கேட்டுட்டு சரினா அவனுக்கும் அவுங்க அம்மாகிட்ட கெஞ்சி ஒன்னு சேர்த்து வாங்கி வந்து கொள்வான்.

3) கல்லூரியில் படிக்கும் போது UNRESERVEDல தான் ஊருக்கு. லோக்கல்ல எங்க போனாலும் வித்தவுட்!

2) ஆபிசர் சாய்ஸ், ஓல்ட் கார்டினல் போன்ற மட்டி சரக்குகளை மட்டும் தான் அடிப்பான். ட்ரீட்டில் மட்டும் VSOP அதுவும் நண்பர்கள் கெஞ்சினால் தான். தொட்டுக்க ஊறுகாய் மட்டும்!

1) இதே சோமசுந்தரம் 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பங்காளி சண்டையில் ஜெயில் சென்றுள்ளான்.அங்கு தண்ணீர் தாகத்தில் கக்கூஸ் பொந்தில் இருக்கும் நீரை கையில் மோந்து குடித்ததை அவன் நண்பன் ஒருவனிடம் மட்டும் கூறி வெளியில் சொல்லிடாதே என்றும் சொன்னதாக அந்த நண்பன் சொன்னான்.

0 0 0

குறிப்பு : கழுதைக்கு வாக்கப்படுவது என்பது மென்பொருள் வேலையில் சேர்வது தான்,தயவு செய்து  குழப்பிக் கொள்ள வேண்டாம்