Monday, May 16, 2011

ஷகிலா


ஷகிலாவே உனக்கு தெரியுமா?


‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை’
பாடினான் பாரதி தமிழ்நாட்டில்
நிறைவேறியது கேரளாவில்…
முன்னணி ஹீரோக்களுக்கு
போட்டியாக உன் படங்கள்!

வரிச்சலுகையை
எதிர்பார்த்து வைத்ததில்லை
இருந்தும் தூய தமிழில்
உன் படத்தின் டைட்டில்கள்!

பாடத்தில் வைக்காத
பாலியல் கல்வியை
உன் படத்தின் மூலம்
கற்றதாக சொன்னார்கள்
சில மாணவர்கள்!

காமத்திலிருந்து
காமெடி ரோலுக்கு
வந்த பின்
உனக்கும் பெண் ரசிகர்கள்!

இலவசமாக
உன் அரைநிர்வாண படத்தை
விளம்பர சுவரொட்டிகளில்
பயன்படுத்துகிறார்கள்
சில ‘ஆண்மை குறைவா’
அணுகவும் டாக்டர்கள்!

சீச்சீ என்று சொன்னவர்களும்
உன் திருமணத்திற்கு பின்
சேச்சி என்று
சொல்லப்போகிறார்கள்!

ஷகிலாவை உனக்கு தெரியுமா?
 (15-04-2010)

Saturday, May 14, 2011

எம கண்டம்

எப்படி ஆரம்பிப்பது??

ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சகா ஒருவர் எடுத்துருக்காரே என்று பாராட்டுவதா? இல்லை ஒரு சுமாரான கதையில் குறும்படத்தை எடுத்ததை சொல்லிவிடுவோமா? குழப்பதுடனே ஆரம்பிக்கிறேன்.

நம்ம பசங்களின் படத்தை கான்ஸ் விழாவில் செலக்ட் செய்ததால் மிகவும் பெருமைப்பட்டேன்,

தமிழ் எழுத்து, நிறுவன INTRANET ஹோம் பேஜ்ஜில் வந்ததால் அடைந்த பூரிப்போடு நில்லாமல் ஆர்வத்தில் யூ.டியூப்பில் தேடி கு.படத்தை பார்த்துவிட்டேன். அது தான் நான் செஞ்ச தவறு. 

அப்படி என்னதான்யா கதைனு கேட்குறீங்க. சொல்றேன்.

       
வாழ்க்கையில் நொந்து போன கிருஸ்தவ தொழிலாளி ஒருவன் சூசைட் செய்துகொள்ள தூக்கு கயிறோடு வீட்டுக்கு வருகிறான்.இவனை அவ்வழியில் தம்மிக்கொண்டிருக்கும் போலீஸ் பார்த்து சந்தேகப்படுகிறார்.
ச.பட்டது சரி தான் என்று வீட்டை திறந்து பார்க்கும் போது தெரிகிறது போலீசுக்கு. அவரிடம் டேக்கா கொடுத்துவிட்டு ஓடுறான் ஓடுறான் அந்த ஏரியாவின் ஓரத்திற்கே….(விவேக் நகர் அருகில் இருக்கும் ஏரியாவாக இருக்கும் என்பது என் அனுமானம்)  ஃபைனலா ஒரு லாரியில் அடிபட்டு நினைத்தை சாதித்த சந்தோசத்தில் சாவுறான் அத்தொழிலாளி.

இக்கதையை தான் கான்ஸ் விழாவுக்கு அனுப்பலாம்னு இருக்கேன். எப்படி இருக்குனு பிரதாப் போத்தன் சார் கைல கேட்டிருந்தா I AM SORRY பிரபுனு சொல்லிருப்பார்.

கேமரா, எடிடிங் எல்லாம் மிகச் சிறப்பு. 11.00 லிருந்து 10.30 மணிக்கு வருவது எல்லாம் செம கட். பிரசன்னா சிவராமனின் மியூசிக் கட்டாயம் பாரட்ட வேண்டிய ஒன்று.

டைட்டிலை எடுத்துட்டு கோலிவுட் ரசிகர்களுக்கு போட்டு காண்பித்தால் கட்டாயம் கவுதம் மேனனோட அடுத்த படத்தின் ஒரு சீன் பா என்பார்கள் தான்! ஆனால் அது மட்டும் போதுமா என்ன கான்ஸ்க்கு?

இந்து போலீஸ் (போலீசுக்கு என்னயா எமகண்டம் என்று சொல்றார்) துரத்தி கிருஸ்தவ தொழிலாளி RAZA – E – GARID என்ற முஸ்லீம் லாரியில் அடிப்பட்டு சாவுறான். ஏன் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரை ஒரு சர்தார்ஜியாக காண்பித்து இருக்கலாமே?!

இந்த பாரத விலாஸ் லாஜிக் எல்லாம் தம்புடிக்கு பெராதது டைரக்டர் சார்.

சரி பதில் சொல்லுங்க.

’வாழ்க வளமுடன்’ மஞ்சப்பை மேட்டர் நம்மொழி தெரியாதவர்களிடம் ரீச் ஆகுமா? (சப் டைட்டில் போட்டாலும்)

வீட்டிலும் அடிப்பட்ட லாரியிலும் ஃப்ரெஷ்ஷான பச்சை மிளகாயை தினம் தினம் புதுசா மாட்டுவாங்களா என்ன?

படம் நேர்க்கோட்டில் பயனிக்கவில்லை. SAGE YAJNAVALKYAவின் நீதிமொழிக்கு வஞ்சனை பண்ணாமல் இருந்தது போன்ற +கள் இருந்தாலும் மொத்தத்தில்

’உண்மையிலே வொர்த் தானா’ என்ற கேள்வியை விதைத்துவிட்டது இக்கு.படம். ஒருவேளை நான் எதும் ராகு காலத்தில் படத்தை பார்த்து தொலைசுட்டனோ என்னவோ :-(