Thursday, June 23, 2011

பத்து விதிகள்

1

மருமகளும் மாமியாரும்
ஒரே நேரத்தில்
பிள்ளை பெற்றால்
அண்ணி  அம்மா
முறைகள் இடம் மாறும்.

                                                                             
2

கன்னிப் பசங்களே
நீங்க
ஆக்ஸ்  அடிச்சுட்டு
ஸ்பரைட்  குடிச்சுட்டா
மட்டும் போதுமா?
நிறைய பொய்களும் தேவை
ஃபிகர் மடக்க!

3

நைய்டி போட்ட ஆன்ட்டி
குனிந்து தண்ணீர் பிடிக்கும் போது
நமக்கு வரும் விக்கலுக்கு
காமம் என்று பெயர்.


4

மக்களின் தாகத்தை
தீர்க்காவிட்டாலும்
சாலையின் தாகத்தை
கட்டாயம் தீர்த்து வைக்கும்
தண்ணீர் லாரிகள்.5


பைக்கில் கட்டிப்பிடித்து செல்லும்
ஜீன்ஸ் அணிந்த பெண்களை
கண்டு எரிச்சல் அடைபவர்களுக்குள்
கொஞ்சம்
ராம்சேனா கொள்கை உண்டு.


 
6


விசேஷ வீடுகளில்
சக்கரை வியாதி
வெளியே தெரிந்துவிடக்கூடாது
என்று நினைப்பவர்கள்
தயக்கத்துடன் பாயாசம் குடிப்பார்கள்.

7

ஊரில் உள்ள
பெண்களை பற்றி
கிசுகிசு  பேசுபவர்களின்
உறவு பெண்களை
குறித்து உண்மையே சொன்னாலும்
தப்பு என்று சொல்லுவார்கள்.

8


அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ
பகலில் நைய்டி அணியும்
பெண்களுக்கு
துண்டு தான் துப்பட்டா.

9


தெருக்களில் விற்பவர்களிடமிருந்து
வாங்கினவர்களுக்கு
வந்த பின்
வாசிக்க மறுக்கும்
புல்லாங்குழல்.

10


யூ ட்யூப், இன்டர்நெட் போல
எது வந்தாலும்
நள்ளிரவு நடுநிசி காட்சி மட்டும்
படத்திற்கு என்றைக்கும்
மவுசு தான்.
Wednesday, June 8, 2011

லெமூரியாவில் இருந்த காதலியின் வீடு - லலிதானந்த்

ஒரு புத்தகத்தை வாங்கும் போது அதன் அட்டையில் போட்டிருக்கும் கவிதை,அணிந்துரை யார் எழுதியிருக்கா என்று முக்கியமாக பார்த்துவிட்டு உள்ளே நாலைந்து கவிதைகளை படிச்சபின் தான் அதை வாங்கும் பழக்கம் உள்ள எனக்கு, இந்த புத்தகத்தின் தலைப்பை மட்டும் பார்த்து வாங்கி ஏமாந்தது ஒரு பாடம்.

வேடசந்தூரில்(என் ஊர் தான்) வெளிவரும் கவிதைப்புயல் சிற்றிதழ் புகழ்
சுகுமார் பழைய விடுகதைகளையும்,காலண்டர் நோட்டுகளையும் ரீமேக் செய்து எழுதுவார்.
அப்படிபட்ட குப்பையே லலிதானந்தின் கவிதைகளை படித்தபின் ஒரு 100 மடங்கு பரவாயில்லைனு  சொல்ல தோணுது.

கிஞ்சித்தும் அர்த்தம் இல்லாத Statement வகை (மொக்கைகள் என்று சொல்வது கூட தவறு) கவிதைகளை எழுதி ஒரு தொகுப்பும் போட்ட லலிதானந்த் என்ற நாகலாபுரத்தானை பாராட்டத்தான் வேண்டும்.

நவீனக் கவிதை + அழகியல் ரொமான்ஸ் ஸ்டைல் இரண்டையும் கலந்து கேணத்தனமாக எழுதி ஒரு தனி ட்ரெண்ட் செட்டராக உருவாக நினைத்து இருப்பார் போல.

கீழிருக்கும் கவிதைகளே சாம்பிள்

வெட்டப்பட்ட குழிக்குள்
இறந்த யானையைப்
புதைத்தபோது
உறக்கம் கலைந்த
மண்புழுவின் நெளிவில்
புரண்டு படுத்தது பூமி
காதலின் அவஸ்தையுடன்


‘உன் மீன் தொட்டி
உடைந்து சிதறிய போது
கடலலைகளின் ஒருதுளி
என் இமைகளில்


‘தேச வரைபடத்திலுள்ள
ஆறுகளின் கோடுகளைப்போல
நரம்புகள் தெரியும் கையில்
தேங்காய் சிரட்டையை நீட்டி
தேநீர்க்கடை வாசலில்
அந்தக் கிழவி
கெஞ்சிக் கொண்டிருந்தபோது
நான் உனக்காகக்
காத்திருந்தேன்


இவருடைய என்னுரையில் அன்பை வழங்கும் நண்பர் நா.முத்துக்குமார்க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அட..அன்போடு உங்களின் சில கவிதை தொகுப்புகளையும் சேர்த்து கொடுத்து இருக்கலாமே முத்துக்குமார் அவர்களே!!

சரிங்க லலிதானந்த்.. எழுதினது எழுதிவிட்டிங்க..உங்களுக்கு சில சிபாரிசுகள் தயைகூர்ந்து படிங்க,அதற்கு பின் எழுதுங்க

காமத்துப்பால்- திருவள்ளுவர் 

காதல் மனப்பாடப் பகுதி வைகைசெல்வன்.

படிப்பவர்கள் யாராது இதை ஒரு Negative Marketing என்று புத்தகத்தை வாங்கி விஷ பரிட்சை செய்ய நினைத்தால்.
போதையில் Strict ஆ படிக்க வேண்டாம் ,சுத்தமா இறக்கிவிடும்.

பாதியிலே ஓடி வந்த படம் மாதிரி இதையும் சொல்லிகொள்ளலாம் பாதியில் மண்டைய காய வைத்த கவிதை தொகுப்புனு.

குமரன் பதிப்பகத்திற்குனு ஒரு வேண்டுகோள்.

உங்களுக்குனு ஒரு பேர்,Standard இருக்கு அதை கெடுக்க இது மாதிரி புத்தகங்களை போடுவதற்கு பதில் நீங்க 30 நாளில் கவிதை எழுதுவது எப்படி போன்ற புத்தகத்தை போட்டு லலிதானந்த் மாதிரி ஆட்களுக்கு மலிவு விலையில் கொடுக்கலாம்.
இப்படி விமர்சிக்க உனக்கு என்ன தகுதினு யாரும் கேட்காதிங்க!! இதுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் ஒண்ணியும் தேவையில்லை!!


(2009-04-14)