Tuesday, July 19, 2011

இந்தியா வல்லரசாக முயற்சி செய்பவர்களில் சிலர்


SUN MUSIC, SS MUSIC, JAYA PLUS, இசையருவி போன்ற டிவிகளுக்கு SMS அனுப்புபவர்கள். மேலும் அது டிவியின் கீழ் பகுதியில் ½ விநாடி வருவதைப் பார்த்து பூரிப்பு அடைபவர்கள்.

ORKUT, FACE BOOK  இத்யாதி இத்யாதி.. போன்ற பப்ளிக் ஃபோரம்களில் ஜாதியின் பெயரில் இருக்கும் கம்யூனிட்டியில் மெம்பராகவும், தன் பெயருக்கு பின்னால் ஜாதியின் பெயரையும் போட்டு கொள்பவர்கள்.

அஜித் பெரிய ஆளா - விஜய் பெரிய ஆளா என்று சண்டை போடுபவர்கள்.

மணிக்கணக்கா வெய்ட் செய்து பெப்சி உமா / நினைத்தாலே இனிக்கும் சூர்யா போன்ற ஆட்களுக்கு ஃபோன் செய்பவர்கள்.

5 அல்லது 10 பேருக்கு மெயிலை FORWARD  செய் இல்லைனா காத்து கருப்பு அடிச்சிடும் , செஞ்சா உனக்கு இரண்டு கோடி பரிசுனு சொன்னதும் அதை கடைபிடித்து அனுப்புபவர்கள்.

EXPIRY ஆன ‘பொங்கல் வாழ்த்து’ டைப் கவிதைகளை இன்றைக்கும் எழுதுபவர்கள்.

தொலைக்காட்சியில் போடும் CRICKET HIGHLIGHTSல் ஒரு பிளேயர் சிக்ஸ் அடிச்சா அதற்கும் கை தட்டி அவரை ஊக்கபடுத்துபவர்கள்.

‘1000 பெரியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள் போல’ அப்படினு விவேக் சொன்னது உண்மையிலே ஜோக்குனு நினைச்சு பெரியாரித்தின் மூலம் மக்களை திருத்த நினைப்பவர்கள்.

நோட்டின் அட்டை படத்திலோ அல்லது பர்ஸிலோ ஏதேனும் நடிகையின் வண்ணப்படத்தை வைத்து இருந்தால்,அந்த நடிகைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமலே
அவரை துணைவி(மனைவி அல்ல) என்று நினைக்கும் மாங்காய் விற்பவர்கள்.

லோ-பட்ஜெட் படம் என்றாலே மேட்டர் படம் தான் என்ற நிலைமைக்கு கொண்டு வந்த டைரக்டர்கள்/நடிகர்கள்/தயாரிப்பாளர்கள்(பெரும்பாலும் மூவரும் ஒருவராத்தான் இருப்பார்கள்).


0 0 0

3 comments:

Suresh Kumar said...

என்ன இது, திடீருன்னு நம்ம பேரைப் போட்டு தொடர சொல்லிட்டீங்க...இப்படி எல்லாம் நீங்க வேலை செய்ய சொன்னா இந்தியாவை வல்லரசா மாத்தற என்னோட வேலையை யாரு பாப்பாங்க...சாரி பாஸ், நான் பிஸி :)

க.தமிழினியன் said...

@Suresh Kumar

ha..ha..haa.. take your time and post it suresh!

you can do it ;)

Suresh Kumar said...

அட இப்படி எல்லாம் எழுத மாட்டேங்க..என்னால 'மட்டும்' தான் முடியும் அப்படின்னும் நீங்க சேத்து சொன்னா தான் எழுதுவேன் ;)