Friday, July 8, 2011

செம்மொழியாம் தமிழ்மொழியின் டபுள் மீனிங் சினிமா பாடல்கள் – சிறு பார்வை


முன்பெல்லாம் ஊர்த் திருவிழா நாடகங்களில் (பெரும்பாலும் வள்ளி திருமண) பிள்ளையார் சுழியாக வரும் பபூன் எதாவது இரட்டை அர்த்த மொக்கை ஜோக்குகளை அவிழ்த்து விடுவார், அதை கேட்டு சீ செண்டர் ரசிகர்களும் வயிறு வலிக்க சிரிப்பார்கள்.ஆனால் இன்றைக்கோ பபூன்கள் மிக நேரடியாக சொல்லிவிடுகிறார்கள்(!)

ஏன்? என்று லைட்டா யோசித்தால் அதற்கு சினிமா பாடல்கள் தான் காரணம் என்றும் இரட்டை அர்த்தங்களின் இடத்தை இவை பிடித்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டதும் தெரியும்.

சங்க காலத்தில் இருக்கும் சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி அணியை பற்றியெல்லாம் சொல்லபோவதில்லை.நேரடியாக 20ம் நூற்றாண்டை பார்ப்போம்.

முதலில் ஒரு கேள்வி.
‘நீலக் கடல் அலைகள் உனது நெஞ்சின் அலைகளடி’ என்று சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா பாடலில் பாரதியார் கூறுயது உண்மையிலே இரட்டை அர்த்தம் தானா??

சரி கட்டுரைக்கு வருவோம்.

1960களில் 'பேசுவது கிளியா' என்று சொன்னாலே அது சரோஜா தேவி தான் என்று முணுமுணுத்த, 'சேரணுக்கு உறவானா' அது எம்.ஜி.யார் இல்லை என்று சண்டையிட்டு கொண்ட, 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி....' காமராஜருக்கு கண்ணதாசன் எப்படி நூல் விடுறார் பாரு என்றெல்லாம் கூறிய மக்களுக்கும் காலத்திற்கும் சுதந்திரம் கொடுத்தாச்சு.

இன்று நறுக்குனு கடிக்கிலாம்னு  இருக்கு(ஃபான்டா ஆப்பிள்), கோனாலா இருந்தாலும் என்னோடது (குர்குரே) என்று விளம்பரம் வரை டபுள் மீனிங் சால்ஸா டான்ஸ் ஆடும் யுகம்.

இந்த யுகத்தை பாடலாசிரியர்கள் வாரியாக பார்த்தால் கொஞ்சம் ஈஸி.
வாலி, வைரமுத்துவில் இருந்து ஆரம்பிப்போம்.இருவருமே குறும்பர்கள்.

வைரமுத்துவின் பாடல்களில் காமம் கலந்த காதல் வரிகள் அதிகம்.
'கட்டில்கள் ஆடாமல்…. தொட்டில்கள் ஆடாது' என்று இலை மறை காயாக சொல்வதிலும் 'மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா..மார்கெட்டு போகாத குண்டு மாங்கா…' என்று காய் மறை இலையா சொல்வதிலும் அவருக்கு அவரே நிகர்.

சாமுராய் படத்தில் வரும் 'ஒரு நதி', ரிதம் படத்தின் ‘தீம்தனனா’,
உயிரேவின் ‘நெஞ்சினிலே’,ஜெண்டில்மேன் படத்தின் ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ போன்ற பாடல்களை கேட்டாலே உங்க மைண்ட் ஒத்துக்கொள்ளும்.

கமல்ஹாசனிற்கு ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ காலத்தில் இருந்தே இக்கட்டுரைக்கு தொடர்பு இருக்கு.
ஆனாலும் சுய விளம்பரத்தை விரும்பாதவரா அவர் என்ற கேள்வி எழும்பியது தசாவதாரத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்..’ பாடலில் இடம் பெற்ற இந்த வரிகளால்.

‘ராஜ லஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்... ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்’
(கமல் அவர்களின் தாயாரின் பெயர் ராஜலஷ்மி. தந்தை பெயர் ஸ்ரீனிவாசன்)

இப்பாடலை எழுதிய வாலி கூட காரணமாக இருக்கலாம்.அவர் விரசங்களை விட மற்றவர்களை புகழ்வதில் இரட்டை மாங்கா அடிப்பார்.

’ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான்’ 

மேலே சொன்ன பாடலில் வரும் வரிகள் தான் இவையும், வாலி அவர்களின் இயற்பெயர் “ரங்கராஜன்” கெடச்ச கேப்புல சேம் சைட் கோல் போட்டுள்ளாரா என்றும் ஐயம்.

வாலியின் இப்பாடல் வரிகளைப் பார்த்தாலே போதும்.விளக்க தேவையில்லை.

‘கதவச் சாத்து கதவச் சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமையா ஆமா
கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய
நீ கட்ட வேணும்’

அடுத்து ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே...’
தளபதி படத்தில் வரும் இந்த பாடல் சூப்பர் ஸ்டாரை குறிப்பதாக இருந்தாலும், இளைய ராஜா அவர்களின் தாயாரின் பெயர் சின்னத்தாய் என்பதால் அவரைத்தான் இந்தப் பாடலில் வாலி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்  என்றும் கூறுபவர்கள் உள்ளனர்.

‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா,ராஜா கைய வச்சா அது ராங்கா போகாதே’ (மாஸ்ட்ரோ பட்டம் வாங்கின போது போட்ட பாடல்) போன்றவை இளையராஜா துதி பாடுபவை.

அனைத்து பாடலாசிரியர்களுக்கும் போட்டி வச்சா முதல் பரிசு பேரரசுக்கு தான்.படத்திற்கு இரு பாடலாவது செக்ஸ் மசாலா சேர்த்து அறைத்துவிடுவார். ஞானபீட விருது தரும் அளவிற்கு அவர் எழுதிய வரி இது.

’வாடா வாடா வாட்டர் பாக்கெட், காத்திருக்கு காலி பக்கெட்டு.’
திருப்பாச்சி - அப்பன் பண்ணத் தப்புல, சிவகாசி- என்னாத்த சொல்லுவேனுங்க, ஆத்தாடி..ஆத்தாடி (திருப்பதி) போன்ற பாடல்கள் சில உதாரணம். 

(அடுத்து)
தூள் படத்துல இத்துனுண்டா முத்ததிலே இஷ்டம் இருக்கா பாடலில் ’யாழ்ப்பாணம் யானை தந்தம் என்மெல முட்டியது..நாகப்பட்டினம் கப்பல் இப்ப தரைய லேசா தட்டியது ’ னு வரும் வரிகளை எழுதியவரான பா.விஜயும் விவேகாவும்(என் பேரு மீனக்குமாரி….என் ஊரு கன்னியாகுமாரி புகழ்) எழுத்தில் S.J.சூர்யாக்கள்!

துளி இரட்டை அர்த்தம் கூட இல்லாமல் எழுதும் ஒரே கவிஞர் தாமரை மட்டும் தான். 

அறிவுமதி, தமிழ்ப்பாலில் கருத்தாலும் சரி சொல்லாலும் சரி நஞ்சுகலக்க மனம் ஒப்பமாட்டேன் என்று விலகியிருக்கிறார். இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல மூன்று,நான்கு அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும் என்றும் கூறுகிறார்.

முமைத் கான் தோன்றும் செம்மொழி பாடல்களில் காட்டுவதும் காட்டாததும் A சமாச்சாரம் தான் (உதாரணம்:என் சொந்த ஊரூ ஊட்டி…என்னை சொட்டர் போட்டுக்கோ...)

மொத்தத்தில் இவ்வகை பாடல்களை பெரும்பாலும் ரசிக்க ரசிகர்கள் உண்டுதானே??

சிறும்பாலும் இதெல்லாம் மனசு அல்லது மண்ணாங்கட்டிய பொருத்து என்று கூறுவார்கள். அவர்களை நம்பிவிடாதீர்கள்.எல்லாம் கபடநாடகம்.101% உள்ளூர ரசிக்கும் வகையறாக்கள் ஆவார்கள்!

(2010-07-23)


குறிப்பு : சில பாடல்கள் மற்றும்  சில கருத்துகள்  உதவி   'கார்த்திக் பிரபு'  &4 comments:

Niroo said...

//‘ராஜ லஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்... ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்’
(கமல் அவர்களின் தாயாரின் பெயர் ராஜலஷ்மி. தந்தை பெயர் ஸ்ரீனிவாசன்)//

கமல்ஹாசன் ஒரு சரித்திரம்

jai jai sai said...

i dont agree abt that ad view....

நறுக்குன்னு கடிக்கலாம் போல இருக்கு & கோணலா இருந்தாலும் என்னோடது..... இந்த இரண்டும் ஹிந்தியில் இருந்து அப்படியே translate செய்ததால் அப்படி தோன்றுகிறது....

உன்னோடு இன்னும் நிறைய நேரம் பேச வேண்டும் நண்பா, உன் எழுத்துக்கள் படிக்கும் போது உன் மீது உள்ள மரியாதையை அதிகம் ஆகிறது......

க.தமிழினியன் said...

@Niroo

//கமல்ஹாசன் ஒரு சரித்திரம்//

correct!

க.தமிழினியன் said...

@jai jai sai

Thanks for your comments. we can talk on any intresting topic!