Tuesday, July 12, 2011

வா.மு – வா.பி

என் இனிய தமிழ் மக்களுக்கு...இங்கு சோமசுந்தரம் என்வரின் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கேன். இவரின் வாழ்க்கையும் மென்பொருள் மாதிரிதான் வெர்ஷன் மாறியதே தவிற பிறவி குணம் அப்படியே தான் உள்ளது. 

இவர் வாழ்க்கையின் முக்கியமான ரெண்டு வெர்ஷன்கள் இதோ..

கழுதைக்கு வாக்கப்பட்ட பின்:

1) QUA குடித்து பழகிய சோமசுந்தரத்திற்கு மற்ற தண்ணீர் இறங்கவில்லை. எவ்வளவு தாகம் எடுத்தாலும் அவனுடைய கொள்கையை மாற்றமாட்டேன் என்று சொல்லுவது வழக்கம்.
அது போலவே எந்த ஹோட்டல் போனாலும் அங்கு வைக்கும் சாதா தண்ணீரை குடிக்க மாட்டான்,விக்கல் எடுத்தாலும்!

2) சரக்கடிக்கலாம் என்று A/C பார்க்கு கூட்டிட்டு போய் 100 பைபர்ஸ் மட்டும் அடிச்சான். சைடு டிஷ்ஷா சிலபல டிக்காக்கள்!

3) சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து 2 அல்லது 3-tier AC யிலோ தான் ஊருக்கு போறான். ஆபிஸ் காசு என்றால் ஃப்ளைட்ல  கூட பறப்பேன்னு சொல்லுறான்.

4) தினமும் மதியம் சாப்பிடுது வெஜ் சாலட் – சிக்கன் பர்கர்.ஓசியில் கிடைத்தாலும் குடிப்பது DIET COKE மட்டுமே.

5) வில்ஸ் INSIGNIA தவிற வே எந்த ப்ராண்டும் அடிக்கிறது இல்லைனு படா கோல்ட் ஃப்ளாக் வாங்கி வந்த நண்பனிடம் கூறினானாம்!

6) கொள்கை கொள்கைனு சொல்றவன், டெஹ்ராடூனில் அவன் பியூனா இருந்த போது கஞ்சா அடிச்சிருக்கான்.
ஏன்டானு கேட்டா? ’குமரிமுத்து,மதன் பாப் மாதிரி சிரிப்போம்னு ஒரு மாயை இருந்துச்சு அதான் உண்மையானு அடிச்சு பார்த்தேன்.இதுல என்ன தப்பு?’ என்று திரும்பி கேக்குறான்.

7) நகத்தை அழகா வச்சுக்க MANICURE பண்ணிகிறான். MAC காஸ்மடிக்ஸ் தான் உபயோகபடுத்துவது, தவறாமல் மாதம் இருமுறை கோல்ட் ஃபேசியல் செய்துக்கிறான்.

8) சூடோகு (Sudoku) போடுறான். எப்படினு கேட்டா சம்பந்தமில்லாம ZINCOVIT குடிக்கிறேன்னு சொல்லுறான்.

9)  டிஸ்கோத்தே போறான்...ராப் சாங் கேக்குறான்...பப் தான் இவனுக்கு டீக்கடை.


கழுதைக்கு வாக்கப்படும் முன்:

9) ‘ஆடலும் பாடலும்’ எந்த ஊரில் போடுவாங்கனு அலைவான். அங்கு அவனுடைய கூட்டாளிகள் சகிதம்ரெக்ட் டைம்க்கு ஆஜர் ஆனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.
ஆனாலும் சரக்கடிக்க மாட்டான். ஏனா எவனாது தண்ணி போட்டுட்டு எப்படி கண்ணுமுண்ணு தெரியாமா ஆடுது பாரு’ னு சொல்லிடக்கூடாதுனு கொள்கை!

8) கையில் நல்லா சொடக்கு போடத்தெரியுமே தவிற சூடோகு எல்லாம் தெரியாது. மேலும் சூடோகு சால்வர்களை கண்டால் எரிச்சல் அடைவான். பேப்பர் படிக்கும் போது முன்னாடியே யாராவது அதற்கு விடை எழுதியிருந்தா அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவான்.

7) நகத்தில் வெள்ளை பூ இருந்தால் புது சட்டை கிடைக்கும் என்று நம்பும் இவனுடைய அதிகபட்ச அழகு சாதன பொருள் கோகுல் சாண்டல் பவுடர் மட்டுமே!

6) அவன் ஒட்டு பீடி அடிக்கிறதுக்கு முன்னாடியே கஞ்சா பற்றி அவனுக்கு தெரியும் என்றும், அவுங்க ஊர் தள்ளு வண்டி இழுக்கும் தனுஷ்கொடினு ஒருத்தன் கஞ்சா இழுத்துட்டு சும்மா இங்கிலீசுல பட்டய கெளப்புவாருனு அடிக்கடி சொல்லுவான்.

5) அவனிடம் இருக்கும் காசுக்கு தகுந்த மாதிரி பிராண்ட் மாறும்   ரொம்ப வசதியா இருந்தா தான் ஃபில்டரே!

4) ஊரில் இருக்கும் போது லவ்வோ தான் குடிப்பான். யாராது வீட்டுக்கு வரும்போது கலர் குடிக்கிறீங்களானு கேட்டுட்டு சரினா அவனுக்கும் அவுங்க அம்மாகிட்ட கெஞ்சி ஒன்னு சேர்த்து வாங்கி வந்து கொள்வான்.

3) கல்லூரியில் படிக்கும் போது UNRESERVEDல தான் ஊருக்கு. லோக்கல்ல எங்க போனாலும் வித்தவுட்!

2) ஆபிசர் சாய்ஸ், ஓல்ட் கார்டினல் போன்ற மட்டி சரக்குகளை மட்டும் தான் அடிப்பான். ட்ரீட்டில் மட்டும் VSOP அதுவும் நண்பர்கள் கெஞ்சினால் தான். தொட்டுக்க ஊறுகாய் மட்டும்!

1) இதே சோமசுந்தரம் 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பங்காளி சண்டையில் ஜெயில் சென்றுள்ளான்.அங்கு தண்ணீர் தாகத்தில் கக்கூஸ் பொந்தில் இருக்கும் நீரை கையில் மோந்து குடித்ததை அவன் நண்பன் ஒருவனிடம் மட்டும் கூறி வெளியில் சொல்லிடாதே என்றும் சொன்னதாக அந்த நண்பன் சொன்னான்.

0 0 0

குறிப்பு : கழுதைக்கு வாக்கப்படுவது என்பது மென்பொருள் வேலையில் சேர்வது தான்,தயவு செய்து  குழப்பிக் கொள்ள வேண்டாம்
8 comments:

Suresh Kumar said...

இது நாளைக்கு நம்ம ப்ளாக்ல வருமா? ;)

க.தமிழினியன் said...

@Suresh Kumar

அவ்ளோதானே போட்டு விடுவோம் சுரேஷ்! then கமண்டியதிற்கு நன்றி!

jai jai sai said...

உனது ப்ளாக் படிப்பதும் கீர்த்தியுடன் விளையாடுவதும் ஒன்றுதான்
எப்போதும் திகட்டாதவை.....
உனது கவிதையை எப்படி படிக்க வேண்டும் தெரியுமா
http://www.youtube.com/watch?v=uWXdToTdsGw&feature=fvsr
go to that link, listen to that song & read......

suresh said...

ஊர்ஸ்,. //கழுதைக்கு வாக்கப்பட்ட பின்:// // கழுதைக்கு வாக்கப்படும் முன்:// ... நல்ல தலைப்பு.. ப்ளாக் ரசிக்கும்படியாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..

vijay.G said...

அட்ரா சக்கை சூப்பர் அப்பு கலக்குடா கலக்குடா என்சாய்

க.தமிழினியன் said...

@suresh

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி ஊர்ஸ்!

க.தமிழினியன் said...

@vijay.G

கலக்கிரலாம் சீனியர்!

க.தமிழினியன் said...

@jai jai sai

நன்றிகள்! பகிர்ந்த பாடல் அருமை!