Wednesday, August 17, 2011

ஊடாடும் வாழ்வு - படிச்சுப்பார்த்தேன் ஏறியது என்ன?

நூலின் ஆசிரியர் கவியோவியத்தமிழன் திண்டுக்கல்காரர் என்ற ஒரே காரணத்தினால் வாங்கி படித்த சிறுகதை தொகுப்பு!

மனுஷன் சும்மா கருத்து சொல்கிறேன் என்று எதையும் திணிக்கவில்லை. அந்துமணி ஸ்டைலில் சொல்லணும்னா இவர் பார்த்தது-படித்தது-கேட்டதை தான் கொஞ்சம் கற்பனை மசாலாவும் கொஞ்சம் செண்டிமெண்டும் (பூனை கதையில் மட்டும் அதிகமாக) சேர்த்து அரைத்துள்ளார்.என்ன ஆரண்ய காண்டம் திரைப்படம் போல கெட்டவார்த்தை பேசும் கதாபாத்திரங்கள் கதைகளில் அதிகம்!கதைகளின் களம் என்று பார்த்தால் திண்டுக்கல்லை மையமாக வைத்து 50KM ரேடியஸில் ஒரு வட்டம் போட்டால் எத்தனை ஊர் வருமோ, அவ்ளோதான் இவர் குதிரை ஓட்டியுள்ள குண்டுச்சட்டியின் நிலப்பரப்பு.

கதைகளில் வரும் ஹீரோவை நம்ம கற்பனையில கொண்டுவர்றது ரொம்ப சிரமம்! ஏனால் அவன் கவிதை எழுதுறான், ஓவியம் வரையிறான், தண்ணி அடிக்கிறான், அஜால் குஜால் பண்றான், பொசுக்கு பொசுக்குனு அழுறான்(ஊடாடும் வாழ்வு கதையில்), பகுத்தறிவு பேசி சாமி சிலையில் காரி துப்புறான் (செங்காளியில்), ஆனா கருத்து மட்டும் சொல்லமாட்டிங்கிறான். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கொஞ்ச நாள் முன் வெளியான ‘தா’ படத்தின் கதாநாயகன் முகத்தோடு கொஞ்சம் ஒட்டி போகும்!

காதில் பூ வைக்கும் கதைனா ‘ஒரு ரசிகை’ மட்டும் தான்.
பெரும்பாலான கதைகளில் ஆணாதிக்க சமூகத்தை கண்முன் காட்சியாக விவரிக்கிறார். அப்பறம் காதலை கவிதையா எழுதியிருக்கார் கதைகளில் (மின்மினிகளின் ராஜ்யம் அதில் உச்சம்) என்ன பண்றது கைலி வேட்டியும் தாடியும் வச்சுக்கின்னு அழுக்காயிருக்கிற ஹீரோக்களுக்கு தானே காதல் வருது இக்காலத்தில்?!

நூலில் இடம்பெற்ற கதைகளின் காலக்கட்டம் 15 வருடங்கள் இருக்கலாம் என்பது என் அனுமானம். ஏனா சில மொக்கையான கதைகளும் அடங்கியிருக்கு!

அதிலொன்று தான் நண்பன் மனசு-ஹீரோவின் முகமறிந்து 100 ரூவை ஒருவனிடம் கொடுத்து கிளம்பும் நண்பனை பற்றி. இந்த காலத்தில் இப்படிப்பட்ட நண்பர்களை பார்ப்பது அரிது!

அப்பறம் காதலென்பது , பள்ளிக்கு நேரமாச்சு ஆகிய இரண்டும் ஸாலிடர் டிவி சமாச்சாரம்.
இலக்கியத்தால் வரும் ஒரு பெண் நட்பு காதலாக மாறினபின் பிரியுதாம் ஆனாலும் பிரியம் அப்படியே இருக்காம்!

பள்ளிக்கு நேரமாச்சுவின் கதாபாத்திரம் செல்வியின் அம்மா க.காதலனுடன் ஓடி விடுகிறார்,அப்பா – சாதி சண்டையால் செத்துப்போகிறார் இவள்(செல்வி) கலெக்டர் கனவுடன் கொய்யாப்பழம் விற்க பள்ளிக்கூடம் செல்கிறாள்,யப்பப்பா…..

கவியோவியத்தமிழனிடம் கேள்விகளை கேட்க தூண்டும் கதைகளை பார்ப்போம்.

எந்த மிக்ஸிங்கும் கலக்காத பக்கா ’ரா’வான கதைகளில் ஒன்று பிடிமானம்
ஃபுள்ளா ஓல்ட் மங் அடிச்சுட்டு வர குடிகார கணவன் தினமும் தன்னை அடிக்கலாம்,ஆனால் வேற யாராது அவனை அடித்தால் தாங்க முடியாம பத்ரகாளியாக மாறுகிறார்,குடிகாரனின் மனைவி!
கண்ணகி,நளாயினி போன்ற பெண் கதாபாத்திரமா ஆசிரியர்?

அடுத்து காத்திருப்பில் பெய்யும் வெயில்

கண்மணிக்காக மணப்பாறை பேருந்து நிலையத்தில் காத்திருக்கறார் கதைநாயகன். லெட்சுமி என்னும் மாற்றுதிறனாளி கதாபாத்திரத்தில் எதையோ சொல்றீங்க. ஃபினிசிங் என்னதான் சொல்ல வரிங்கனே தெரிலயே க.யோ.தமிழன்?

அல்பாய்ஸ்ல செத்தவனின் பாடியின்(டெட்) பார்வையில் இருந்து விவரிப்புகளால் வித்தியாசமான கதையாகிறது மின்னல் பூக்கும் இரவு ஆனால் வினிதா ஏன் வெள்ளை புடவையும்,கூந்தல் விரிச்சுக்கிட்டு அழையிற சினிமா பேய் போல காட்சி தருகிறார்?

அக்கா, மனைவி என்பவள், கைக்கு எட்டியது மூன்றும் அக்மார்க் டிவி மெஹா சீரியல்!

பின்ன வீட்ல அம்மா தொல்லை தாங்கமுடியாமல் துணி விற்பவன் கூட திருப்பூர்க்கு ஓடிவீடுவது, மனைவியோடு சண்டை போட்டு கொண்டு நைட் 12.30 வரை டீக்கடையில் சும்மா உக்கார்ந்துவிட்டு கிளம்புவது, STD பூத்ல வேலைபார்ப்பவள் மேல் காதலோ காமமோ கொள்ளும் ஒருவனை அண்ணே என்று சொல்லி அவள் கலட்டிவிடுவது எல்லாம் வேறெதுல சேக்குறது மக்களே?

கிளைமாக்ஸ் கதையான புயலான தென்றலில் சந்திரா என்னும் விதவை படும் அன்றாட அவளங்கள் சொல்லப்படுகிறது. அதிரும் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லையென்றால் இக்கதையும் சீரியல் பட்டியலில் சேர்ந்திருக்கும்.

அவசரம், துளசி, கரைதாண்டுதல் இந்த மூன்றும் தான் என் பார்வையில் ஸ்டார் கதைகள்! இக்கதைகளுக்காக மட்டுமே புத்தகத்தை வாங்கலாம்.

அவசரம் - இயற்கை உபாதையை(கக்கூஸ்) தெரியாத ஒரு ஊரில் போக்கப்படும் அவஸ்தையை கதையாக எழுத யாராவது யோசிக்க முடியுமா?? படிக்கும் போது கூட மூக்கை பொத்தி கொண்டு படிக்க வேண்டிய மாதிரி பண்ணிட்டார்!

துளசி - கம்ளர் என்ற காமகொடூர சாதியினருடன் பழகி எழுதியது போல இருக்கு,ஆனாலும் அதிர்ச்சியாக்கவில்லை. முஸ்லி பவர் சாப்பிட்டு கூட சல்லாபிக்கும் ஆட்கள் இருக்கும் ஊரில் தானே நாம் இருக்கோம்!

குழந்தை இல்லாத செவ்னி ’வீரப்பூர் கோயில்’ சென்று குழந்தைக்காக கரைதாண்டுவது இன்ஃபர்மடிவ்!

ஒகே முடிச்சிருலாம்.

புத்தகத்தை முழுவதும் படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேய்ந்தால் சாரு நிவேதிதாவின் தேகம் நாவலை மிஷ்கின் ’சரோஜாதேவி’ என்று உளறியது போல செய்ய வாய்ப்புகள் அதிகம்!

அப்படி யாராது உளறினாலும் அதை எல்லாம் தூக்கி ரீசைக்கிள் பின்ல போட்டுவிட்டு நீங்க கலக்குங்க கவியோவியத்தமிழன்!
o o o

இந்த சிறுகதை தொகுப்பு வெளியீடு : தீக்குச்சி வெளியீட்டகம். திண்டுக்கல்.
வெளியீட்டாளர் : இரா. தமிழ்தாசன். விற்பனை தொடர்புக்கு அலைபேசி : 90031 83822.98420 98002. விலை ரூ 80.00 

No comments: