Wednesday, August 24, 2011

வெற்றிநடைபோடுகிறது


வசீகரன், இன்சூரன்ஸ்(லைஃப் மற்றும் லைஃபை புடுங்கும் வெஹிகில் இரண்டுக்கும்) ஏஜண்ட் & சென்னை புறநகர் ஈஸ்ட் தாம்பரத்தில் ஆல்-இன்-ஆல் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் பேச்சுலர் – கம் - எஸ்.டி.ஆர் ரசிகரும்.

புகழேந்தி, அங்கு கணினி ஆப்ரேட்டர்.போட்டோஸாப்பில் பூபந்து விளையாடுவான்.மென்பொருள் கம்பெனியில் 1 வருடம் பெஞ்சு தேச்ச அனுபவமும் உண்டு.

அன்று ஞாயிற்றுக்கிழமை 11 A.M. 

”வசி, இந்த ரிப்போர்ட்ஸ ஃபிரண்ட் & பேக் ரெண்டு சைடும் 4 காப்பி போடு” என்றாவாரே சென்டரினுள் நுழைந்தான் 44 இன்ச் சட்டையிலிருந்து 39 இன்ச் சட்டைக்கு மாறியிருந்த ரவி.

”குட் மார்னிங் ரவிணே” ஆர்வமாக பக்கத்தில் வந்தான் புகழ்.

”எதுக்கு ரவி? இத ஜெராக்ஸ் போடு மாப்ள” என்றான் புகழிடம்.

”காப்பீட்டு திட்டத்தில் ஆஸ்பத்தரில சேரப்போறேன் அதான்.”

ஜெராக்ஸ் போடும் போது ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை மேய்ந்ததில் 132 T செல்ஸ் பெர் மைக்ரோ லிட்டர்(µL) (200 T செல்ஸ் கீழே இருந்தால் எதிர்ப்புச்சக்தி இல்லாம ஆளு காலி அப்படினு ஹெல்த் டுடேவில் படிச்சுருக்கான் புகழ்) என்றிருந்ததை பார்த்து ”கன்ஃபார்மா அப்ப” மெதுவாக சொல்லிக்கொண்டான் புகழ்.

”இந்தாங்கணே ஜெராக்ஸ்…. டைட் ஃபிட்டிங் சட்டைலாம் போட்டு நல்லாதானே இருக்கீங்க…..என்ன வியாதி திடீர்னு?”

தும்மினான் ரவி.

”சைனஸா?” 

”நிமோநியா காய்ச்சல்.”

”மாப்ள…..அந்த ஷில்பா பொண்ணோட ஜாவா கோட்ல நல் பாய்ண்டர் எக்ஸப்ஷன் வந்துச்சு அத பாரு” இடைநுழைந்தான் வசி.

”அது ஃபிக்ஸ் பண்ணியாச்சு மாம்ஸ். அண்ணே ரொம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்னு இருந்தேன்.இன்னைக்கு கேக்கட்டா?” 

”என்ன?”

”ஃபிகர் மடிக்க ஐடியா தாங்கணே…..நீங்கதான் தீராம அனுபவிச்ச விளையாட்டு பிள்ளையாம்ல!” 

”எவன் சொன்னது?” உறுமினான் ரவி.

”மாப்ள கம்முனு இரு. நீ கிளம்பு ரவி இவன் சும்மா உளறுறான்”

”பொறுங்க மாம்ஸ்….ஊரே சொல்லுது. ’நிஜம் நடந்தது என்ன’ல கூட சீக்கரம் வந்துரும் போல.”

”கடுப்ப ஏத்தாத….…..”

(ஏதோ ஒரு FMமில் ''ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் என்ற பாடல் யாருக்கோ டெடிக்கேட் ஆகிக்கொண்டிருக்க)

”சுச்சுவேசன் சாங் மாம்ஸ்.உங்க அனுபவி ராஜாரவிக்கு எத்தனை ராணிகணு தெரியுமா?”

ரவி புகழை கெட்ட வார்த்தையால் திட்ட ஆரம்பித்தான்.

புகழ் I.P.C 298 செக்‌ஷன்ல கேஸா போடுவான்? அவனும் பதிலுக்கு சகட்டுமேணிக்கு திட்டி அடிக்க போக….. அக்கம்பக்கமும் வசியும் சமாதானப்படுத்தி ரவியை கிளப்பியதும் களேபரம் நின்றது.

”ஏன் மாப்ள எல்லாத்தையும் கலாய்க்கிற மாதிரி இவனையும்? பாவம்டா அவன்.”

”நீங்க தான சொன்னிங்க?”

“…….”

”நான் இவன்ட்ட அப்படி என்ன சொன்னேன்னு யோசிக்க வேணாம்.முந்தாநேத்து சாயங்காலத்துக்கு போய் பார்த்தாலே போதும் மாம்ஸ்.”

முந்தா நேற்று 7 P.M.

நாலு ஸ்டெப் நடை, நாலு ஸ்டெப் ஓட்டம், நாலு ஸ்டெப் நடை, நாலு ஸ்டெப் ஓட்டம் என்று கடந்து போன அந்த வெள்ளிக்கிழமை ஸாஃப்ட்வேர் பெண்குட்டிய வெறிச்சு பார்த்தவாரே பேச ஆரம்பித்தான் வசி.

“இந்நேரம் புகழ் இருந்திருந்தா சும்மா 2 ஸ்ட்ரோக் ஆட்டோ மாதிரி குழுங்கிட்டு போறாலேனு ஜொல்லிருப்பான்”

”ஹா..ஹா.. நானும் கேட்கணும்னு நினைச்சேன்.எங்க அவனைக் காணாம்?” என்றான் வசியின் நண்பன் சந்தோஷ்.

“சோலார் வாட்டர் ஹீட்டர் மாட்றதுக்கு S.P.கோயில் வரைக்கும் போயிருக்கான்.”

“ஆமாமா…இப்பயே குளிர ஆரம்பிச்சுருச்சு! சரி வசி லேட்டாச்சு.கிளம்புரேன் வீட்ல வைஃப் திட்டுவா..”

”உன் புருசன் திட்டுவான்றது தெரிஞ்சதுதான கிளம்பு.”

“உனக்கு கல்யாணமாகலைனா நக்கல் தன்னால வரும்பா” யமகாவில் கிக்கிட்டு கிளம்பினான்.

சந்தோஷ் கிளம்பிப் போனபின் தான் வரவேண்டும் என்று காத்திருந்தது போல புகழ் வந்துசேர்ந்தான்.

“மாம்ஸ், ஃபுல் லோடு தண்ணிலாரி ECRல பிரேக் பிடிக்காம போற மாதிரி ஒரு வைட் டீ-சர்ட் போச்சு பாத்திங்க? இல்ல மிஸ் பண்ணிடிங்களா?.” 

”ம்” 

”அவ நடை மின்னல்,இடை பளிங்குகல்,அதில் என் மனசு சறுக்கல்……. படிச்சு படிச்சு சொன்னார் எங்கப்பா டி.ஆர் ஹீரோவா நடிச்ச படத்தை பாக்காதடானு கேட்டனா நான்? அதான் இந்த எஃபெக்ட் கண்டுக்காதிங்க”

‘ம்’

”சரி. ஒரு நல்ல மேட்டர். ஒரு கெட்ட மேட்டர்.சொல்லட்டுமா?”

’ம்’

இந்நேரத்துல என்ன மூட் அவுட் இவருக்கு ”மாம்ஸ்,ஷங்கரோட அடுத்த ’அழகிய குயிலே’ படத்துல எஸ்.டி.ஆர் தானாம் ஹீரோ!”

”உண்மையா…எதுல படிச்ச?” உற்சாகமானான் வசி.

”இப்ப வாயத்தொறந்துட்டிங்களா? சும்மா கப்ஸாவிட்டேன்.எப்பயும் போல கெட்ட மேட்டரை கேக்காமலியே சொல்லட்டா?”

”சரி…சொல்லு”

”உங்க உயிர் நண்பன் ரவி இப்ப புள்ளிரவியாம்ல…?”

”மிக்ஸிங் ஊத்தாம ராவா சொல்லு மாப்ள.”

“ம்கும்…..ரவிக்கு HIV+ஸாம்!”

”அடப்பாவி அவனுக்கா?”

”சரியான ஜேம்ஸ்பாண்ட் மாம்ஸ் அவன்.”

”எதுல?”

”வேறெதுல…லேடிஸ் மேட்டர்ல தான்.”

”ஹ்ம்ம்….புள்ள பிடிக்கிற ’ஆம்வே’ல சேந்து பொம்பளை பிடிக்கும்போதே நினைச்சேன் எதாவது வெனைவரும்னு.”

”அப்பறம் அந்த I.P.C 498aவ மிஸ்யூஸ் பண்ணி அவன் பொண்டாட்டி டைவர்ஸ் வாங்கினதும் இதனாலதானு கிசுகிசு ஊருக்குள்ள...உண்மையா கூட இருக்கலாம் மாம்ஸ்”

”சங்கட்டமா இருக்கு மாப்ள. ஏற்கனவே என் ஃபிரண்ட் வீராச்சாமி சிஃபிலியஸால போன மாசம் செத்துட்டான்,இப்ப இவனும்..”

”டிக்கெட் வாங்கப்போறானு சொல்லவறிங்களா?.. வீராச்சாமி அந்த கூடுவாஞ்சேரி ஆளு தான?”

”ஆமாம்.அதுகூட க்யூர் பண்ணமுடிஞ்ச வியாதி தான் ஆனா எல்லாரும் அவனை புறக்கனிச்சதால தான் ஏங்கி செத்தான். ஆனால் ரவி மேட்டர்ல அத தவிற்கணும்.சமமா டிரிட் பண்ணனும்.பசங்க கிட்டயும் சொல்லிரு. அவன்கிட்ட நீயும் மத்தவங்கள்ட ஜாலியா இருக்கிற மாதிரி இரு.”    

”அதான் இப்பயெல்லாம் மணக்க மணக்க மல்லிகப்பூ வாசத்தில கிடைக்குதே அதை மாட்டாம நோய மாட்டிகிட்டா நாம ஏன் பரிதாபப் படணும் மாம்ஸ்?”

“ஆயிரம் தப்பு பண்ணாலும் நம்ம பையன்டா அவன்!”

”சரிவிடுங்க தென்கச்சி பாஷைல சொல்லணும்னா இத்தனை நாள் இனிமையா இருந்த ரவிக்கு இனி வரும் நாட்களும் இனிமையா இருக்கட்டும்.”

”குட்”

(அமைதி)

”சரி சரி…அந்த நல்ல மேட்டர் என்ன மாப்ள?”

”அதுவா…’பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை முதல் ரேங்க் வாங்க வைப்பது எப்படி?’னு ஒரு சிறுகதை எழுதிபோட்டேன்.செலக்ட் பண்ணியிருக்காங்க ஆ.விகடன்ல.”

”என்ன மணிமேகலை பிரசுரம் டைப் கதையா?”

”இல்ல மாம்ஸ். டைட்டில் மட்டும் தான் அப்படி. கதை சும்மா ’வா.மு.கோமு’ ஸ்டைல் அஜால் குஜால் தான்!”

”அப்ப ஸ்யாமின் க்ளாமர் ஸ்டில்லோடு எதிர்பார்க்கலாம்” என்று சட்டரை மூடினான் வசி.4 comments:

ராஜன் said...

இப்பதான்யா நீ ரூட்டையே புடிச்சிருக்க! கதை கெடக்குது கழுதை... சொல்றத நுணுக்கி நுணுக்கி சல்லி பிரிச்சுடணும் தானா படிக்கற இண்ட்ரஸ்ட் வந்துடும்மக்களுக்கு! கீப் இட்! UPPPP!

க.தமிழினியன் said...

@ராஜன்

உங்களுடைய கமண்ட் படித்தபின் எனக்கு ரெட்புல் குடித்த மாதிரி இருக்கு!

மதுரை சரவணன் said...

//இல்ல மாம்ஸ். டைட்டில் மட்டும் தான் அப்படி. கதை சும்மா ’வா.மு.கோமு’ ஸ்டைல் அஜால் குஜால் தான்!”//

enaththa solla.. vaalththukkal. asaththi vitteerkal.

க.தமிழினியன் said...

@மதுரை சரவணன்

தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் கமெண்ட்டிற்கும் நன்றிகள்.